உள்ளும் புறமும்

உள்ளும் புறமும்- வண்ணநிலவன்; கல்கி பதிப்பகம்; சென்னை- 32. பக். 112; ரூ. 65; போன்: )044-43438822. சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு என்பதுதான் கதையின் மையப்புள்ளி. மனோகரியும் கிருஷ்ணபாரதியும் தம்பதிகள்.
உள்ளும் புறமும்

உள்ளும் புறமும்- வண்ணநிலவன்; கல்கி பதிப்பகம்; சென்னை- 32. பக். 112; ரூ. 65; போன்: )044-43438822.

சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு என்பதுதான் கதையின் மையப்புள்ளி. மனோகரியும் கிருஷ்ணபாரதியும் தம்பதிகள். கிருஷ்ணபாரதி ஒரு பத்திரிகையாளன். உலக சினிமாவின் மீதும் ஆர்வமுடையவன். அறிவுபூர்வமான விவாதங்களில் ஈடுபடுபவன். அவனுக்கு சுசீலா என்றொரு தோழி. கிருஷ்ணபாரதியைச் சந்திக்க அவன் வீட்டுக்கு சுசீலா அடிக்கடி வருவதும் அவனுடன் ஸ்கூட்டரில் ஒன்றாகப் படம் பார்க்கக் கிளம்பிப் போவதும் மனோகரி மனதில் சந்தேக விதையை ஊன்றுகிறது. இறுதியில் மனோகரியையும் சுசீலாவையும் சந்திக்க வைத்து பிரச்னையை தீர்ப்பதோடு கதை முடிகிறது. வண்ணநிலவன் தன் வழக்கமான கதைபோக்கிலிருந்து மிகவும் மாறுபட்டு எளிய உத்திகளோடும் உரையாடல்களோடும் ஜனரஞ்சக பத்திரிகைக்கான தொடர்கதையாக இதை எழுதியுள்ளார். சுசீலாவுக்குப் பெங்களூருக்கு மாற்றலாகிவிடவே மனோகரியிடம் "இனிமேல் நான் உனக்குத் தொல்லையாக இருக்க மாட்டேன்' என்கிறாள். நான் நகரத்தில் வளர்ந்தவள் ஆண்களைத் தொட்டுப் பேசியே பழகியவள் என்று கூறுகிறாள். மனோகரியும் தன் தவறை உணர்ந்து கொள்வதோடு அவள் பெங்களூர் போய்விடுவதில் சந்தோஷப்பட்டுக் கொள்கிறாள். வாழ்வில் சிறிய கீற்றுபோல வந்துபோகும் மனக்குழப்பம் எப்படி ஒருவழியாக தெளிவாகிறது என்பதோடு, இப்படியான தவறான புரிந்து கொள்ளலும் தெளிவடைதலும் வாழ்வின் கரைகள் போல அமைந்திருப்பதாகவும் எண்ணத் தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com