நெருஞ்சி

நெருஞ்சி- முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்; பக்.159; ரூ.75; அனுராதா பப்ளிகேஷன்ஸ், கும்பகோணம் -ஆர்எம்எஸ், 612605; )04366-262237 உலகின் நான்கு திசைகளிலும் மக்கள் வாழ்வை உலுக்கிக் கொண்டிருக்கும் கொடியோர்
நெருஞ்சி

நெருஞ்சி- முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்; பக்.159; ரூ.75; அனுராதா பப்ளிகேஷன்ஸ், கும்பகோணம் -ஆர்எம்எஸ், 612605; )04366-262237

உலகின் நான்கு திசைகளிலும் மக்கள் வாழ்வை உலுக்கிக் கொண்டிருக்கும் கொடியோர் வெறியாட்டத்தை உரத்துப் பேசும் நாவல். துணிவு,ஆற்றல் அறிவு கொண்ட ஈழத் தமிழச்சியாக கொற்றி என்ற கார்த்தியாயினி பாத்திரம் சிறப்பாகப் படைக்கப்பட்டுள்ளது. "அந்தப் பொம்பள கிட்ட எந்த ஆயுதமும் செல்லாது, நாமெல்லாம் அடியாளுங்க; அந்த அம்மா போராளிடா' என்று துணை பாத்திரம் மூலம் கொற்றியின் வீரத்தைப் பறைசாற்றுகிறார் ஆசிரியர். நாவலைத் தொய்வின்றி நடத்திச் செல்வதில் பூவாயி, அண்ணாமலை, முகிலன் பாத்திரங்கள் துணை நிற்கின்றன. "தமிழர் வாழ்வில் தொய்வுற்றிருக்கும் கொடுமைகளுக்கெதிரான போர்க் குணத்தை தட்டி எழுப்பும் தமிழாய் நெருஞ்சி தலைநிமிர்கிறது' என்று தனது அணிந்துரையில் காசி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளது மிகையல்ல. விறுவிறுப்பு வேண்டுமென்பதற்காக நாவலின் சில பகுதிகளில் "திரைப்படத்தனம்' ஆங்காங்கே புகுத்தப்பட்டு இருப்பது நெருஞ்சியில் நெருடல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com