நெல்லை நாட்டுப்புறத் தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்

நெல்லை நாட்டுப்புறத் தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும் - சு.சண்முகசுந்தரம்; பக்.736; ரூ..600; காவ்யா, சென்னை-24; )044-23726882 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழமையான நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகள், பண்பா
நெல்லை நாட்டுப்புறத் தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்

நெல்லை நாட்டுப்புறத் தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும் - சு.சண்முகசுந்தரம்; பக்.736; ரூ..600; காவ்யா, சென்னை-24; )044-23726882

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழமையான நாட்டுப்புறத் தெய்வ வழிபாடுகள், பண்பாடு, மக்களில் ஒருசாராரின் ஆன்மிகப் பழக்கங்கள், சடங்குகள் போன்றவை குறித்து ஆய்வு நோக்கில் அருமையாகத் தொகுக்கப்பட்டுள்ள நூல். நெல்லை மாவட்டத்தின் நாட்டுப்புறத் தெய்வங்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஆலயங்கள், அவற்றின் சடங்குகள், மக்களின் உணர்வோடு ஒன்றுபட்ட சுடலைமாடன், பேச்சியம்மா, முத்தாலம்மன், வீரன் உள்ளிட்ட தெய்வங்களின் கொடை விழாக்கள், அன்றாட வழிபாடுகள் போன்றவற்றை அழகாகத் தந்துள்ளார். ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என்று தனித்தனியாகத் தொகுத்துள்ளது சிறப்பு. சில ஆலயங்களின் புகைப்படங்கள் பின்னிணைப்பாக உள்ளன. வழிபாடும் பண்பாடும் எனும் பகுதியில், நாட்டார் தெய்வ வழிபாடு என்ற கிராம தேவதைகளின் வழிபாடு குறித்தும் வைதிக மத வழிபாடுகள் குறித்தும் தகவல்களைத் தந்துள்ளார். இதில், இந்து மத வழிபாட்டுத் தொகுப்பில் இருந்து நாட்டார் வழிபாட்டைப் பிரித்துக் காட்ட சில ஆய்வாளர்களின் கருத்துகளை எடுத்தாண்டிருக்கிறார். ஆய்வு நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளதால், பாரம்பரிய வழிபாடு குறித்த அரசியல் ரீதியான பார்வைகளும் கருத்துகளும் இடம்பெற்றிருக்கின்றன. இருப்பினும் மண் சார்ந்த தகவல்களின் சிறப்பான ஆராய்ச்சிப் பதிவு இந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com