"ஓ' ஹோ பக்கங்கள்

"ஓ' ஹோ பக்கங்கள் -; பக்.248; ரூ.190; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், நாகர்கோவில்; )04652-278525.

"ஓ' ஹோ பக்கங்கள் -; பக்.248; ரூ.190; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், நாகர்கோவில்; )04652-278525.

எழுபதுகளிலிருந்து இன்று வரை தொடர்ந்து தமிழ்ச் சமூகச் சூழலின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் பற்றி விருப்பு, வெறுப்பற்று தனது கருத்துகளைத் துணிவுடன் ஊடகங்களில் பதிவு செய்து வருபவர் ஞாநி.

"ஓ' பக்கங்கள் என்ற தலைப்பில் வெவ்வேறு இதழ்களில் அவர் எழுதிய ஐம்பதுக்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

இதில் உள்ள கட்டுரைகளில் "மனிதர் கழிவை மனிதர் அள்ளும் கொடுமை', "இந்தியன் பீனல் கோடு செக்ஷன் 377', "நந்திகிராமத்தில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல்', "தி டாவின்ஸி கோட் படத்துக்குக் கிறிஸ்தவ அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பு', "தமிழ்நாடு தனிநாடு ஆக வேண்டுமா?', "வங்கதேச நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார்', "நம்மூர் நடிகர் நாகேஷ்' என்று சூரியனுக்குக் கீழ் உள்ள எல்லா விஷயங்கள் குறித்தும் தன் கருத்தைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளார் ஞாநி.

குறிப்பாக, "கண்டேன் கண்டேன் என் கண்களால் நான் கண்டேன்' கட்டுரையில் இவர் குறிப்பிடும் "இலவசங்களுக்கு எல்லாம் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளித்தரும் மாநில அரசு, கண் அறுவைச் சிகிச்சைக்காக வெறும் 50 கோடி ரூபாயை ஒதுக்கினாலே போதும் தமிழகத்தின் எல்லா ஏழைகளுக்கும் கண் அறுவை சிகிச்சை செய்துவிட முடியும்' என்ற கருத்தும், "யார் இடியட்? டி.வி.யா, நாமா?' என்ற கட்டுரையில் டி.வி. நிகழ்ச்சிகளுக்கு என இவர் பரிந்துரைக்கும் சில விதிமுறைகளையும் உடனடியாக மாநில அரசு அமல்படுத்தலாம்.

"ஏன் தமிழா ஏன்?', "சர்ச்சைக்குரிய உறவுகள்', "உலகத்தின் குப்பைத் தொட்டியா இந்தியா? ', "வேண்டாம் சாதனை வெறி' ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

சமூக சிந்தனை மிக்க கட்டுரைகள் படிக்க முடியாதவாறு சுவாரஸ்யமற்று இருக்கும் என்கிற கருத்தை பொய்ப்பித்திருக்கிறது ஞாநியின் இக்கட்டுரைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com