அமுதம் பருகுவோம்

அமுதம் பருகுவோம்: ப.முத்துக்குமாரசுவாமி; பக்.128; ரூ.100; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.

அமுதம் பருகுவோம்: ப.முத்துக்குமாரசுவாமி; பக்.128; ரூ.100; பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14.

இந்து மதத்தின் சிறப்புகளை அழகாக வெளிப்படுத்தும் நூல். தியானம் மனித வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது. தனி மனிதனின் உயர்வுக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் தேவையான அறநெறிகளை ராமாயணம்,மகாபாரதம், பாகவதம், பகவத் கீதை போன்ற அறநூல்களின் மேற்கோள்களோடு எடுத்துரைக்கும் பயனுள்ள நூல் இது.

ஆகம விதிப்படி நிறுவப்படாத சிலைகளினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காது. ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்களினால் நன்மைகள் விளையும்.

நமது துயரங்களுக்கு கடந்த காலத்தில் செய்த பிழைகளே காரணம் என்று உணரும் கொள்கைகளின் அடிப்படையில் இந்து மதம் உருவாக்கப்பட்டது.

மனிதன் பரம்பொருளின் ஒரு சிறிய துணுக்கு என்பதை முதலில் உணர வேண்டும்.

இந்தப் பொருளியல் உலகில் கட்டுண்டு கிடக்கும் மனிதன் மீண்டும் இறைவனை அடைய வேண்டும் என்பதே அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் என்பதை உணர வேண்டும்.

எல்லாரிடமும் சக்தி உண்டு. அதைத் தக்க முறையில் வெளிக் கொண்டு வர வேண்டும்.

தியானம் இறைவனை அடைய உதவும் என்பன போன்ற சீரிய வாழ்க்கைக்கான சிறப்பான பல கருத்துகளை அடுக்கிக் கொண்டே போகிறது இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com