விட்டு விடுதலையாகி....(நாவல்)

விட்டு விடுதலையாகி....(நாவல்) - வாஸந்தி; பக்.408; ரூ. 200; கவிதா பப்ளிகேஷன், சென்னை - 17; 044 }2432 2177.

விட்டு விடுதலையாகி....(நாவல்) - வாஸந்தி; பக்.408; ரூ. 200; கவிதா பப்ளிகேஷன், சென்னை - 17; 044 }2432 2177.

ஒரே நேரத்தில் சமூக நாவலாகவும் சரித்திர நாவலாகவும் மலர்ந்துள்ளது இந்தப் படைப்பு.

ஒருபுறம் சுதந்திரப் போராட்ட கால உக்கிரம். மறுபுறம் அதே காலகட்டத்தில் நிலவிய தேவதாசி முறையின் சித்திரிப்பு. இவை இரண்டும் கடந்த கால நிகழ்வுகள். ஆனால், இவற்றை நிகழ்காலத்தோடு பிணைத்துச் செல்கிறாள் கொடைக்கானலைச் சேர்ந்த ஓர் இளம்பெண்.

நாவலின் உத்தி இவ்வாறு இருக்க, பாத்திரப்படைப்பில் ஆசிரியரின் கைவண்ணம் மிளிர்கிறது. கலைக்கான அர்ப்பணிப்பாக தேவதாசி முறையை அப்படியே ஏற்றுக்கொள்ளும் கஸ்தூரி.

இது ஒரு மானங்கெட்ட பொழைப்பு என்று கூறி தேவதாசி முறையையே மாற்றத் துடிக்கும் லக்ஷ்மி. இப்படி எதிரும் புதிருமான பாத்திரப் படைப்புகளுடன் நாவல் நகர்கிறது.

தேவதாசி முறையை அதன் அசலான முகத்துடன் மிகையின்றி அதற்கே உரிய கெüரவத்துடனும் முன்வைத்திருப்பது இந்த நாவலின் வெற்றிக்கு அடையாளம். அண்மையில் வந்திருக்கும் நாவல்களில் பொருட்படுத்தத்தக்க நாவல் இது என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com