வாரம் ஒரு பாசுரம்

வாரம் ஒரு பாசுரம் - சுஜாதா; பக்.144; ரூ.100; கிழக்கு பதிப்பகம், 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17.

வாரம் ஒரு பாசுரம் - சுஜாதா; பக்.144; ரூ.100; கிழக்கு பதிப்பகம், 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை 17.

ஆழ்வார்கள் பாசுரங்களை அணுகுவது எப்படி? அணுஅணுவாய் சுவைப்பதெப்படி? என்ற முன்னுரையுடன் திகழும், இந்தப் புத்தகம் பிரபந்தப் பாசுரங்களின் விளக்கங்களைத் தாங்கியுள்ளது. அம்பலம் இணைய இதழ், கல்கி வார இதழ்களில் சுஜாதா எழுதிய "வாரம் ஒரு பாசுரம்' என்ற தொடரின் தொகுப்பு இந்த நூல். திவ்யப் பிரபந்தத்தில் இருந்து எளிய பாசுரங்களை விருப்பப்படி தேர்ந்தெடுத்து, விளக்கம் தந்துள்ளார். வழக்கத்தில் இல்லாத அரிய சொற்களையும் இதில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த நூலில் பின்னிணைப்பாக அருஞ்சொற்களுக்கு பொருள் விளக்கம் தந்துள்ளார். 68 பாசுரங்களுக்கான விளக்கம் இதில் உள்ளது. ""பிரபந்தம் முழுவதற்கும் அர்த்தம் சொன்னால் ஆயாசம் ஏற்பட்டு விடும். மாறாக, சில பாசுரங்களை அடையாளம் காட்டும்போது, மற்ற பாடல்களைத் தேட ஆர்வம் ஏற்படும்'' என்கிறார் சுஜாதா. பாசுரம், அதற்கான முன்னுரை, அந்தப் பாசுரத்தின் பின்னணி என சுவைபட விளக்கம் அளித்துள்ளார். சில பாசுரங்களில் காணும் சொற்றொடர்களுக்கு திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கிய சொற்றொடர்களையும் ஒப்புமை காட்டியுள்ளார். ஆன்மிகத் தமிழை சுவைக்க விரும்புபவர்களுக்கு நல்விருந்து இந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com