இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - இந்திரா பார்த்தசாரதி; பக்.400; ரூ.250; கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17.

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - இந்திரா பார்த்தசாரதி; பக்.400; ரூ.250; கவிதா பதிப்பகம், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17.

வெங்காயத்தில் இருந்து வெடிகுண்டு வரை இந்த நூல் அனைத்து விஷயங்களையும் பேசும் எனக்

குறிப்பிட்டிருப்பதுபோல், பல துறைகளைச் சேர்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பொதுக் கட்டுரைகள், தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம், அரசியல் - சமூகம், நாடகம் என ஆசிரியர் சில தலைப்புகளில் கட்டுரைகளைப் பிரித்துத் தந்துள்ளார். அமெரிக்க சந்தையை ஒரு கட்டுரை காட்டும் என்றால், இன்னொன்று ஆழ்வார்களின் அமுதத் தமிழை வெளிச்சமிடுகிறது. "மார்க்சியத்தைப் புதுப்பிக்க வேண்டும்',

"ஆரிய திராவிடப் பிரச்னை', "சமஸ்கிருதம்', "உள்நாட்டில் தமிழுக்கு மதிப்பில்லாதது ஏன்?', "தொன்மைத் தமிழும் நவீனத் தமிழும்', "தமிழ்நாட்டில் பக்தி இயக்கம்', "களவியல், கற்பியல், பெண்ணியம்' என பல்வேறு தலைப்புகளில் சமூகச் சிந்தனைகளை முன் வைக்கிறார் இந்திரா பார்த்தசாரதி. "சங்கத்தில் கலகக் கவிதை' என்ற கட்டுரையில், புறநானூற்றுக் கவிதையை அலசுகிறார். "கற்பில் காணும் பண்பாட்டு அரசியல்' கட்டுரையில், ""அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டுப் போலிப் பண்பாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு அவதியுறும் சொல் கற்பு. கற்பிக்கப்படுவது எதுவோ அது கற்பு. கல்வியினால் உண்டாகும் ஞானமும் கற்புதான்'' என்கிறார். "காரல் மார்க்ஸூம் வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியும்' என்ற கட்டுரையில், பொருளாதாரமும் அரசியல் கொள்கைகளும் அலசப்படுகின்றன. பரந்த அறிவை இந்த நூல், வாசகனுக்குத் தருவது உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com