தொட்டனைத்தூறும் தொல்காப்பியம்

தொட்டனைத்தூறும் தொல்காப்பியம் - ரா.கலியபெருமாள்; பக். 240; ரூ.175; அய்யா நிலையம், 1603, ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, உ.ஆ. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர்-613 006.

தொட்டனைத்தூறும் தொல்காப்பியம் - ரா.கலியபெருமாள்; பக். 240; ரூ.175; அய்யா நிலையம், 1603, ஆரோக்கியா நகர், ஐந்தாம் தெரு, உ.ஆ. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை, தஞ்சாவூர்-613 006.

இலக்கணத்தை எல்லோராலும் அவ்வளவு எளிதாகக் கற்க முடியாது. அதற்கு தீவிர முயற்சியும், ஆர்வமும் தேவை. இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் சிறப்புகளை இந்நூல் எடுத்துரைக்கிறது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தைப் பற்றிய உரைகள் அதிகமில்லாத நிலையில், இந்நூலாசிரியர் அவ்வதிகாரத்தின் இரு இயல்கள் குறித்து தமது கோணத்தில் ஆராய்ந்திருப்பது புதிய முயற்சி. அதுமட்டுமல்ல, தொல்காப்பியச் சூத்திரங்களை எந்தெந்த உரையாசிரியர் எப்படி விளக்குகிறார்? அதில் தனது கருத்து என்ன? என்பதை ஆசிரியர் வரிசைப்படுத்தியிருப்பது வாசிப்போர் எளிதாகக் கருத்துகளை எடுத்துக் கொள்ள ஏதுவாகவுள்ளது.

நூலின் அணிந்துரையில் பேராசிரியர் அ.தட்சிணாமூர்த்தி குறிப்பிடுவதைப் போல, இன்றைய இளம் தலைமுறை தமிழின் மரபு வழிக் கல்வியை மறந்துவிட்ட நிலையில், இதுபோன்ற தொல்காப்பிய உரை குறித்த நூல்கள் தமிழைப் புத்துணர்வூட்டி, அடுத்த தலைமுறைக்கு இலக்கண அறிவை எடுத்துச் செல்லும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இனிவரும் இளந்தலைமுறை தமிழாசிரியர்களுக்கு இலக்கணச் சோலைக்கான வழிகாட்டும் பலகை போலவே இந்நூல் இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com