எனது பயணம் - ஏ.பி.ஜே அப்துல் கலாம்

எனது பயணம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக்.172; ரூ.150; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச், புது தில்லி -110 002.

எனது பயணம் - ஏ.பி.ஜே. அப்துல் கலாம்; தமிழில்: நாகலட்சுமி சண்முகம்; பக்.172; ரூ.150; மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 7/32, தரைத்தளம், அன்சாரி சாலை, தார்யாகஞ்ச், புது தில்லி -110 002.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் "எனது பயணம்' - மிகவும் இனிமையான பயணம். ஒரு மனிதனின் உண்மையான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம்.

தனது 8 வயதில் நாளிதழ்கள் பட்டுவாடா செய்யும் பணியில் தொடங்கி, 82 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இந்நூலின் மூலம் கலாம் அசை போட்டுள்ளார்.

தாய், தந்தையர் பாசத்தில் ஆரம்பிக்கும் அவரது பயணம், நட்புகள், உறவுகள், ஆசான்கள், அறிவியல், ஆன்மிகம் மற்றும் சமூகம் என அனைத்துத் தரப்பிலும் தொடர்ந்து பயணிக்கிறது.

விடா முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகியவை இருந்தால் சாமானிய மனிதனும் சாதனையாளராக முடியும் என்பதை மிகத் தெளிவாக விவரிக்கும் அற்புதமான படைப்பு.

தனது பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், தனது வாழ்க்கையில் எத்தகைய தாக்குதல்களை ஏற்படுத்தின என்பதை இந்நூலின் மூலம் கலாம் எடுத்துரைத்துள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான மொழிபெயர்ப்பு. ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் "எனது பயணம்' கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க நிச்சயம் தூண்டுதலாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com