எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு - தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி; பக்.288; ரூ.180; ஜீவா பதிப்பகம், 8, (ப.எண்.38 பி), சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை-17.

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு - தொகுப்பாசிரியர்: கே.ஜீவபாரதி; பக்.288; ரூ.180; ஜீவா பதிப்பகம், 8, (ப.எண்.38 பி), சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை-17.

பொதுவுடைமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவின் உயர்ந்த பண்புகளையும், ஆளுமைத் திறனையும், போராட்ட வாழ்க்கையையும் எல்லாரும் அறிந்து கொள்ளும்வகையில் தொகுக்கப்பட்டிருக்கும் நூல். அவருடன் பழகியவர்கள், போராட்டங்களில் பங்கேற்றவர்கள், சிறையில் உடனிருந்தவர்கள் அவரைப் பற்றி எழுதிய கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நல்லகண்ணுவின் துணைவியார் ரஞ்சிதம் நல்லகண்ணுவுடனான நேர்காணலும் இடம் பெற்றிருக்கிறது. பொதுவாழ்க்கையில் மட்டுமின்றி, தனி வாழ்க்கையிலும் எவ்வாறு ஒரு புரட்சிகரமானதோழராகவே நல்லகண்ணு வாழ்ந்து வருகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலியாக நெல்லைக் கொடுக்கும்போது, நிலச் சொந்தக்காரர்கள் குறைந்த அளவுள்ள மரக்காலில் அளந்ததை எதிர்த்து அவர் முத்திரை மரக்கால் போராட்டம் நடத்தியது, 1948இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது தலைமறைவாக இருந்த அவரைக் கைது செய்த காவல்துறையினர் அவருடைய மீசையை சிகரெட் நெருப்பால் கொளுத்தித் துன்புறுத்தியது, தாமிரபரணி நதியில் கலக்கும் கடனா நதியில் அணைகட்டக் கோரி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது என அவருடைய போராட்ட வாழ்க்கை இன்றைய தலைமுறைக்கு உத்வேகம் ஊட்டக் கூடியதாக அமைந்திருக்கிறது.

நல்லகண்ணு எழுதிய சில கட்டுரைகள் நூலின் இறுதியில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com