திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள் - ஆர்.சி.சம்பத்; பக்-128; ரூ.100; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; )044-2436 4243.

திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள் - ஆர்.சி.சம்பத்; பக்-128; ரூ.100; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; )044-2436 4243.
பழம்பெரும் நடிகர்கள் பி.யூ.சின்னப்பா, எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.எஸ்.பாலையா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு, திரையுலகில் அவர்களின் பலம்; பலவீனம், திரைப்பட அனுபவங்கள், திரைப்படங்களின் பட்டியல், கதைச்சுருக்கம் என அனைத்தையும் கலந்து கொடுத்து, நூல் வாசிப்பு அனுபவத்தை சுவாரஸ்யப்படுத்துகிறார் நூலாசிரியர். சின்னப்பாவும் பாகவதரும் ஒரே காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தவர்கள். பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம், பாகவதரை வைத்து, ராஜயோகி என்ற திரைப்படத்தைத் தொடங்கி, பாகவதரின் குரலில் பாடல் ஒலிப்பதிவு செய்து முடித்த சமயத்தில், படம் நின்று போனது, ஆனாலும் அவர் பி.யூ.சின்னப்பாவை வைத்து, விகடயோகி என்ற நகைச்சுவைப் படத்தைத் தயாரித்தது, அதில், பல குரலில் பேசும் ஒரு கதாபாத்திரத்தை அமைத்து, "முகுந்தனே...' என்று தொடங்கும் பாகவதர் பாடலைப் பயன்படுத்தியது, அக்காலத்தில், சின்னப்பா மற்றும் பாகவதருடன் சிறு கதாபாத்திரங்களில் எம்.ஜி.ஆர். நடித்தது, கதாநாயகன், வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை வேடம் என ஒன்றையும் விட்டுவைக்காமல் டி.எஸ்.பாலையா நாற்பது ஆண்டுகளில் 140 படங்களில் நடித்தது எனஇன்றைய தலைமுறை ரசிகர்கள் அறியாத அபூர்வத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com