சாமானியனுக்கான சட்டங்கள்

சாமானியனுக்கான சட்டங்கள் - த.இராமலிங்கம்; பக்.112; ரூ.90; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.
சாமானியனுக்கான சட்டங்கள்

சாமானியனுக்கான சட்டங்கள் - த.இராமலிங்கம்; பக்.112; ரூ.90; விகடன் பிரசுரம், சென்னை-2; )044- 4263 4283.
ஒருவர் எந்தக் குற்றமும் செய்யவில்லையென்றாலும், எந்தவிதமான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றாலும், காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டியதாகிவிடுகிறது. அப்படிச் செல்கிற ஒருவருக்கு நடப்பிலுள்ள சட்டங்களைப் பற்றியும், காவல்துறையின் நடவடிக்கைகளைப் பற்றியும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றால், அவருடைய மனதில் பயம் புகுந்து கொள்வதோடு, கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அலைய நேரிடுகிறது.
இந்தக் குறையைப் போக்கும்விதமாக சாமானிய மனிதர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய குறைந்தபட்ச சட்ட அறிவை இந்நூல் புகட்டுகிறது.
காவல்துறை ஒருவரை அரெஸ்ட் வாரண்ட் இல்லாமல் எந்தக் குற்றங்களுக்காக கைது செய்யலாம்? அரெஸ்ட் வாரண்டுடன் எந்தக் குற்றங்களுக்காக கைது செய்யலாம்? அப்படி கைது செய்யப்பட்ட ஒருவர் பிணையில் வர என்ன செய்ய வேண்டும்? ஜாமீனில் வெளிவருவது, பரோலில் வெளிவருவது இரண்டுக்கும் என்ன வேறுபாடு? நீதிமன்றங்களின், காவல்துறையின் அதிகார எல்லைகள் எவை? நீதிமன்ற நடைமுறைகள் எவை? வீட்டை வாடகைக்கு விடுபவர்களுக்கும், வாடகைக்குக் குடியிருப்பவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்னைகளை எப்படித் தீர்த்துக் கொள்வது? ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்றவற்றைப் பெற என்ன செய்ய வேண்டும்? குடும்பநல நீதிமன்றங்கள் என்ன செய்கின்றன? என அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்களைப் பற்றி இந்நூல் மிக மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது. சாமானிய மக்களுக்கும் பயன்படும் சிறந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com