எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி - எம்.எஸ்.எம்.அனஸ்; பக்.184; ரூ.120; மாற்றுப் பிரதிகள், புத்தாநத்தம்; )04332- 273055.
எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி

எதிர்ப்பு அரசியலின் புரட்சிநாயகன் ஜமாலுத்தீன் ஆப்கானி - எம்.எஸ்.எம்.அனஸ்; பக்.184; ரூ.120; மாற்றுப் பிரதிகள், புத்தாநத்தம்; )04332- 273055.
ஜமாலுத்தீன் ஆப்கானி வடமேற்கு ஈரானில் 1838 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கைத்தொழில் புரட்சி நடந்து தொழில்கள் வளர்ந்த பின், உலகம் முழுவதையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் முனைந்தன. அவற்றின் ஆதிக்கத்துக்குட்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளை எதிர்த்தனர். அப்படி எதிர்க்கும்போது, மேற்கத்திய நாடுகளின் முன்னேற்றகரமான சிந்தனைகளையும் எதிர்த்தனர். இது இஸ்லாமிய சமயத்திலிருந்த பழமைவாதிகளுக்கு உரமூட்டுவதாக அமைந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் முஸ்லிம் நாடுகளை அடக்கி ஒடுக்க முனைந்த ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்தார் ஆப்கானி. அதேவேளையில், முஸ்லிம் பழமைவாதிகளுக்கு எதிராக சமயசீர்திருத்தக் கருத்துகளையும் அவர் முன் வைத்தார்.
ஏகாதிபத்திய நாடுகளின் ஆக்ரமிப்பைத் தடுப்பதற்காக, முஸ்லிம்நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக இந்தியா உட்பட பல நாடுகளுக்குச் சென்று பிரசாரம் செய்தார் ஆப்கானி.
மேற்கத்தியநாடுகளின் ஆக்ரமிப்பு, அரசியல், இராணுவ ஆக்ரமிப்பாக மட்டும் இல்லை; கருத்தியல் மற்றும் சமய, கலாசார ஆக்ரமிப்பாகவும் இருந்தது. இந்த இருவகை ஆக்ரமிப்புகளையும் எதிர்த்த ஆப்கானி, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சிலரின் பழமைவாதத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இஸ்லாமிய நோக்கிலிருந்து நவீன உலகுக்குப் பொருத்தமான சிந்தனைகளை அவர் முன் வைத்தார். ஆப்கானியின் போராட்ட வாழ்க்கையையும், போர்க்குணமிக்க சிந்தனைகளையும் தெளிவாக இந்நூல் முன் வைக்கிறது.
இன்றைய உலகமயச் சூழலில், இஸ்லாமியர்களும், இஸ்லாமிய நாடுகளும் சந்திக்கும் எண்ணற்ற பிரச்னைகளுக்கு சரியான முறையில் தீர்வு காண, தெளிவான பார்வையை இந்நூல் அளிக்கிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com