வணக்கம் வாலி - தொகுப்பு

வணக்கம் வாலி - தொகுப்பு: கே.இளந்தீபன்; பக்.200; ரூ.130; வாலி பதிப்பகம், தாமிரபரணி,  எம்8, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-600 089.

வணக்கம் வாலி - தொகுப்பு: கே.இளந்தீபன்; பக்.200; ரூ.130; வாலி பதிப்பகம், தாமிரபரணி,  எம்8, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை-600 089.
மறைந்த கவிஞர் வாலியின் உதவியாளர் முதல் நண்பர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்படத்துறை மற்றும் அரசியல், இலக்கியப் பிரமுகர்கள், அவரது ரசிகர்கள், கவிஞர்கள் என அனைத்துத் தரப்பினரின் பார்வையிலும் 50 தலைப்புகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட குறுந்தகவல்களுடன் வாலியின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் அலசி ஆராயப்பட்டுள்ளது எனலாம்.
ஸ்ரீரங்கத்தில் அவர் நடத்திய நாடகத்தில் அண்ணாவைத் தாக்கி வசனம் இருப்பதாக கருதிய அரசியல் கட்சியினர் நாடகத்தை தடுக்கப் போனது, எம்.ஜி.ஆர். தனது படத்தில் பாடல் எழுதவேண்டும் எனில் வாலி குங்குமம் வைக்கக் கூடாது என்று கூறியது, "கற்பனை என்றாலும்...கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்' பாடலை வாலி போஸ்ட் கார்டில் எழுதி டி.எம்.செüந்தரராஜனுக்கு அனுப்பியது என்பன போன்ற பல அரிய தகவல்களைப் படிக்கும்போது வியப்பு மேலிடுகிறது.
"துக்ளக்'கில் வாலி எழுதிய தொடரில் ஆசிரியர் சோ திருத்தம் செய்தது, அதற்கு வாலி மறுப்பு தெரிவித்தது, புதுமுக இயக்குநர் அவருடைய பாடலைத் திருத்தியது கண்டு கொதித்து கோபப்படுவது என பல சம்பவங்கள் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. ஸ்ரீரங்கத்தில் உள்ள வாலியின் பூர்வீக வீட்டில் பாம்பு வந்ததைக் கண்டு, ""அது படமெடுப்பதால் என்னிடம் பாட்டெழுத கேட்டு வந்திருக்கும்'' என்று சொன்ன வாலியின் நகைச்சுவை உணர்வும் வியக்க வைக்கிறது.
வாலியின் அனைத்துப் பக்கங்களையும், அலசி ஆராயும் இந்நூலில், சுவாரஸ்யமான தகவல்களும், ஆச்சரியமூட்டும் சம்பவங்களும் நிரம்பி வழிகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com