அறுபடும் யாழின் நரம்புகள்

அறுபடும் யாழின் நரம்புகள் - அ.வெண்ணிலா; பக்.134; ரூ.85; சப்னா புக் ஹவுஸ், கோவை-2; )0422- 4629999.
அறுபடும் யாழின் நரம்புகள்

அறுபடும் யாழின் நரம்புகள் - அ.வெண்ணிலா; பக்.134; ரூ.85; சப்னா புக் ஹவுஸ், கோவை-2; )0422- 4629999.
நூலின் பின் அட்டையில் பெண்ணியக் கட்டுரை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், நூல் விமர்சனக் கட்டுரைகள் உட்பட 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
எனினும் தீவிரமாகச் சிந்திக்கும் ஒரு பெண்ணின் பார்வையில் உலகில் உள்ள சகல விஷயங்களையும் பார்க்கிற கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
இன்றைய ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, பழங்காலந்தொட்டே ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களின் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தங்கள் ஆட்சிக் காலத்தில் செய்தவற்றைத் தங்களின் பெயரால் பொறித்து வைத்துள்ளார்கள் என்பதைச் சொல்லும் "வரலாற்றுக் காலம் தொட்டு இப்படித்தான்' கட்டுரை, அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஒன்றும் புதிதில்லை; மன்னர் காலத்திலேயே நிலத்தைத் தானமாக யாருக்கோ வழங்க மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறும் "நிலமென்பது வெறும் மண்ணல்ல' கட்டுரை, ஆகம விதிகளின்படி கோயில்களில் வழிபாடு நடக்க வேண்டும் என்று கூறும் "ஆகம நெறியையே நடைமுறைப் படுத்துங்கள்' கட்டுரை, ஆளுக்கொரு வீட்டில் வாழ நினைக்கும் மனப்பான்மையை விமர்சிக்கும் "கனவு இல்லம்' கட்டுரை, நூலாசிரியர் பிறந்த வந்தவாசியைப் பற்றிய கட்டுரை, விளையாடிய தெரு, முதன்முதலில் பணிக்குச் சேர்ந்த பள்ளியைப் பற்றிய கட்டுரை என்று பலவிதமான விஷயங்களை உரத்த குரலில் இந்நூல் பேசுகிறது.
எனினும் பெண்களின் பிரச்னைகளை - சமூகம் எவ்விதம் நீதியற்றவகையில் அவர்களைக் கையாள்கிறது என்பதை- சொல்லும் கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்கு தனிமனித மனோபாவம், நீண்ட காலமாக மேற்கொள்ளப்படும் பழக்கங்களின் தொடர்ச்சி ஆகியவை காரணங்களாக அமைவது போன்ற எண்ணம் நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com