ரிஃப்லெக்ஸாலஜி - ஆரோக்கியத்திற்கான சிகிச்சை நுட்பங்கள்

ரிஃப்லெக்ஸாலஜி - ஆரோக்கியத்திற்கான சிகிச்சை நுட்பங்கள் - பெரில் க்ரேன்; தமிழில்: கண்மணி சுப்பு; பக். 128; ரூ.80; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 17; )044 - 2433 2682.
ரிஃப்லெக்ஸாலஜி - ஆரோக்கியத்திற்கான சிகிச்சை நுட்பங்கள்

ரிஃப்லெக்ஸாலஜி - ஆரோக்கியத்திற்கான சிகிச்சை நுட்பங்கள் - பெரில் க்ரேன்; தமிழில்: கண்மணி சுப்பு; பக். 128; ரூ.80; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 17; )044 - 2433 2682.
உலகம் முழுவதும் நவீனமயமாகிவிட்டது. இந்த நவீனம் மருத்துவம் உள்பட அனைத்துத் துறைகளிலும் கால்பதித்துள்ளது. ஒருபுறம் அசுர வேகத்தில் நவீனத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் பழமையை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் இயற்கை விவசாயம், சித்த மருத்துவம் என நமது பண்பாடு சார்ந்தவற்றை மீண்டும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளோம்.
அந்த வகையில் கத்தியின்றி, ரத்தமின்றி, மருந்து மாத்திரைகள் இன்றி தொடு உணர்வு மூலம் அளிக்கப்படும் பழமையான சிகிச்சை முறைதான் ரிஃப்லெக்ஸôலஜி. நமது உள்ளங்கைகளிலும், பாதங்களிலும் உடலின் அனைத்துப் பகுதிகளையும் பிரதிபலிக்கும் மையங்களும், புள்ளிகளும் உள்ளன. இவற்றில் விரல்களைக் கொண்டு அழுத்தம் கொடுத்து, உடல் இயக்கங்களில் சமநிலையை உண்டாக்குவதுதான் ரிஃப்லெக்ஸôலஜி சிகிச்சை முறை.
கை விரல்களைக் கொண்டு அழுத்தம் கொடுத்தல் போன்ற சிகிச்சை முறைகள் எகிப்து, கிரேக்கம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் பண்டைய காலத்திலேயே புழக்கத்தில் இருந்துள்ளன. இதற்கான வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.
மருத்துவம் சார்ந்த அறிவு உள்ளவர்களும், சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், ரிஃப்லெக்ஸôலஜி சிகிச்சை முறைகள் இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன.
உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்குமான சிகிச்சை, சிகிச்சையின்போது செய்யக்கூடியவை, கூடாதவை, யார் யாருக்கெல்லாம் இந்த சிகிச்சை முறையைக் கையாளக்கூடாது என்பவை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
தீவிர நோய்களைத் தவிர்த்து, நம்மை நாள்தோறும் அல்லல்படுத்தும் சிறிய பிரச்னைகளுக்கும், உடல் உபாதைகளுக்கும் ரிஃப்லெக்ஸôலஜி சிகிச்சையும், இந்த புத்தகமும் நல்ல தீர்வைக் கொடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com