பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து

பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து - சாந்தகுமாரி சிவகடாட்சம்; பக்.298; ரூ.350; சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், 1, இலட்சுமிபுரம், இரண்டாவது தெரு, இராயப்பேட்டை, சென்னை-14.
பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து

பூலோக சொர்க்கம் சுவிட்சர்லாந்து - சாந்தகுமாரி சிவகடாட்சம்; பக்.298; ரூ.350; சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், 1, இலட்சுமிபுரம், இரண்டாவது தெரு, இராயப்பேட்டை, சென்னை-14.
சுவிட்சர்லாந்து சென்றுவிட்ட வந்த ஒருவர் நம்மிடம் பேசுவதைப் போல, தனது சுவிட்சர்லாந்து பயண அனுபவத்தை இந்நூலில் நூலாசிரியர் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற பல இடங்களை நமக்குச் சுற்றிக்காட்டுகிறார். ஆல்ப்ஸ் மலைகளில் ஒன்றான மிக உயரமான (3,454 மீட்டர்) ஜீங்புருமலை, 4 கி.மீ.தொலைவு உள்ள இகர் மற்றும் மான்க் மலைகளின் ஊடே உள்ள குகைப்பாதை, ஜெனீவாவில் உள்ள ஜெட் டி யு நீருற்று என பல இடங்களுக்கு நாம் செல்கிறோம். 
அதுமட்டுமல்ல, ஒரு வருடத்திற்கு 9 ஆயிரம் லிட்டர் பால் கொடுக்கும் சுவிஸ் மாடுகளைச் சந்திக்கிறோம். கரடி உருவத்தில், கைக்கடிகார வடிவத்தில், பூக்கள், காளான்கள் வடிவத்தில் சாக்லெட்டுகளைப் பார்க்கிறோம். 30 கோடி ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்களை வியப்புடன் பார்த்து பெருமூச்சுவிடுகிறோம். சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற உருளைக் கிழங்கு சீஸ் சூப்பைக் குடித்து, அதன் செய்முறையையும் தெரிந்து கொள்கிறோம். சுவிட்சர்லாந்தின் மக்கள் யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பழகாதவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்கிறோம். நல்ல பயணக்கட்டுரை நூல் என்று சொல்வதைவிட பயணக் கதை நூல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com