விடிவதற்கு சற்று முன்னே...

விடிவதற்கு சற்று முன்னே... -  ரஷ்யமூலம்: ஐவான்துர்கனேவ்; தமிழில் ஆர்.சி.சம்பத்;  பக்.304; ரூ.200; அருணா பப்ளிகேஷன்ஸ்,  சென்னை-49;  044 - 2650 7131.
விடிவதற்கு சற்று முன்னே...

விடிவதற்கு சற்று முன்னே... -  ரஷ்யமூலம்: ஐவான்துர்கனேவ்; தமிழில் ஆர்.சி.சம்பத்;  பக்.304; ரூ.200; அருணா பப்ளிகேஷன்ஸ்,  சென்னை-49;  044 - 2650 7131.

பொதுவாக  ரஷ்ய இலக்கியப் படைப்புகள் தனிமனித உணர்வுகளை   தேசத்தின் நலனோடு  இணைப்பதாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. படைப்பாளி உருவாக்கிய பாத்திரங்களின் உணர்வுகளோடு அதை படிக்கும் வாசகன் ஒன்றிவிடும்  வகையில் ரஷ்ய படைப்புகள் இருப்பதே அவற்றின் வெற்றிக்கான காரணமாகக் கூட கூறலாம். 

அந்தவகையில் "விடிவதற்கு சற்று முன்னே' என்ற இந்த நாவல் ரஷ்ய புரட்சியை மையமாக வைத்து காதல் உணர்வோடு பின்னப்பட்ட படைப்பாகும்.

தேச நலன் கொண்ட தலைமறைவு வாழ்க்கை வாழும் புரட்சிப்படை வீரன்,   காதலை  எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப் போகும் அவலம்  யதார்த்தோடு நாவலில் விரிந்திருப்பது வியக்க வைக்கிறது.

பருவத்தின் வசந்த வாசலில் நிற்கும் இளைஞர்கள் லட்சியவயப்பட்டால் அவர்களுக்கு ஏற்படும் தடுமாற்றம், கோபம், முடிவெடுக்க முடியாமல் திணறும் உணர்வின் ஆதிக்கம், பற்றிப் படர மரம் தேடும் கொடி வகைத் தாவரங்களைப் போல  தனது எண்ணங்களை கொட்டித் தீர்த்து ஆறுதல் தேடும் போக்கு என மனித உணர்வுகளை நெஜ்தனோவ் எனும் கதாபாத்திரமாக வடிவமைத்திருக்கிறார்  நாவலாசிரியர்.

நெஜ்தனோவ் எனும்  தனிமனிதனை மையமாக வைத்து ஒரு தேசத்தின் புரட்சியின் கதையைக் கூறும்  நாவலாசிரியர், நம்மையும் அந்தக் கால கட்டத்தில்  பயணிக்க வைத்திருப்பது பிரமிக்க வைக்கிறது.

மக்ஷினா, ஆஸ்திராகுமோவ், சிப்பியாகின், வாலென்டினா, மரியன்னா,   கோலமிட்செவ், பாக்லின் என கதாபாத்திரங்களைச் சுற்றிவரும் இந்நாவல், ரஷ்ய மக்களின் புரட்சிகர மனநிலையை படம்பிடித்துக்காட்டுவதாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com