செம்மொழித் தமிழ் நூல்கள்

செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு(தமிழ் பதிப்பு வரலாற்று ஆவணம்) - பதிப்பாசிரியர் கா.அய்யப்பன்; பக்.626; ரூ.600; காவ்யா, சென்னை-24; ) 044-2372 6882.
செம்மொழித் தமிழ் நூல்கள்

செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு(தமிழ் பதிப்பு வரலாற்று ஆவணம்) - பதிப்பாசிரியர் கா.அய்யப்பன்; பக்.626; ரூ.600; காவ்யா, சென்னை-24; ) 044-2372 6882.
 ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது வாழ்த்துரை, பதிப்புரை, முன்னுரை, ஆராய்ச்சியுரை போன்றவை இருப்பது சிறப்பு. இவை அனைத்தும் இல்லை என்றாலும், பதிப்புரை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
 அந்த வகையில், தமிழ் மொழியில் உள்ள செவ்வியல் இலக்கியங்களான தொல்காப்பியம், அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு, இன்னா நாற்பது, ஆசாரக்கோவை, கைந்நிலை முதலிய நூல்களுக்குப் பதிப்புரை, மதிப்புரை, முகவுரை எழுதிய தமிழறிஞர்களின் பதிவுளைத் தொகுத்துரைக்கிறது இந்நூல்.
 கு.சுந்தரமூர்த்தியின் ஆராய்ச்சி முன்னுரையில் தொடங்கி, தொல்காப்பியத்திற்கு சி.வை.தாமோதரம் பிள்ளை எழுதிய பதிப்புரை, ரா.ராகவையங்கார் எழுதிய முகவுரை, அகநானூறுக்கு அ.நாராயணசாமி ஐயர் அளித்த முகவுரை, புறநானூறுக்கு உ.வே.சாமிநாதையர் வழங்கிய முகவுரை எனப் பல்வேறு தமிழறிஞர்களின் பதிப்புரைகள் உள்ளன.
 அகநானூறு பதிப்புக்கு உ.வே.சா. வழங்கியுள்ள முகவுரையில், ""தொல்காப்பியப் பொருளதிகாரத்தில், "மாற்றருங்கூற்றம்' என்னும் சூத்திரவுரையில் "மீனுண்கொக்கின் என்னும் புறப்பாட்டுமது' என்று நச்சினார்க்கினியரெடுத்துக் காட்டிய முதற்குறிப்புச் செய்யுள் ஒரு பிரதியிலும் கிடைத்திலது. பாடல்களிலும், உரைகளிலும், பிரதிகளிற் சொற்கள் சிதைந்தவிடத்தைப் புலப்படுத்தற்கு (......) இவ்வொன்றைப் புள்ளி நிரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாட பேதங்களும் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன'' என்று பதிவு (பக்.230) செய்திருக்கிறார்.
 இப்படி, செவ்வியல் இலக்கியப் பதிப்பு நூல்களுக்கு வழங்கப்பட்ட பதிப்புரை, முகவுரைகளிலிருந்து பல அரிய தகவல்கள், ஆராய்ச்சிக் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com