திருக் - திரிச்ய விவேகம் - பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி

திருக் - திரிச்ய விவேகம் - பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி

திருக் - திரிச்ய விவேகம் - பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி - தமிழில்: க. மணி; பக். 301; ரூ.250; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏகேஜி நகர் முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை - 641015.   

திருக் - திரிச்ய விவேகம் - பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி - தமிழில்: க. மணி; பக். 301; ரூ.250; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏகேஜி நகர் முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை - 641015.

பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஆற்றிய  ஆங்கில உரைகளின் தமிழாக்கம் இது. வேதாந்தக் கருத்தாகிய ஜீவனும் (நாம்), பிரம்மமும் ஒன்றுதான் என்பதை எளிய உதாரணங்களுடன் விளக்குகிறார். பானை -களி மண், தங்கம் - ஆபரணங்கள், கடல் - அலை, இரும்புக் குண்டை நெருப்பில் வைத்தல் போன்ற உதாரணங்களைக் கூறி விளக்க முற்பட்டிருக்கிறார். முதல் 12 பாடல்கள் நம்மைப் பற்றியும் (தத்), பாடல்கள் 13 முதல் 31 வரை பிரம்மம் பற்றியும் (த்வம்), பாடல்கள் 32 முதல் 46 வரை ஜீவ - ஈச்வர ஒருமை பற்றியும் எடுத்தியம்புகின்றன.

நான் என்பது யார்? உடல்தான் நானா? மாயை என்பது என்ன? சம்சாரி என்பவர் யார்? மனக் குழப்பங்களுக்கு என்ன காரணம்? அறிவைப் பெறுவது எப்படி? 

ஞானம் என்பது என்ன? சத் என்றால் என்ன? சித் என்றால் என்ன? ஆனந்தம் என்றால் என்ன? சமாதி நிலை என்றால் என்ன என்பன போன்றவற்றை நமது வாழ்வியல் உதாரணங்களுடன் கூறுகிறார்.

ஞானத்தை அறிவதற்கு தியானம் எந்த வகையில் உதவுகிறது என்று கூறுவதுடன் தெரிந்த பொருளில் அல்லது வார்த்தையில் இருந்து தியானத்தை துவக்கி பரம்பொருளுடன் இணைக்க வேண்டும் என்றும், தொடர்ந்து தியானம் பழக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மோட்சம் என்பது எதிர்காலத்தில் இல்லை, நிகழ்காலமே என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

ஜீவன் கால - இட வரம்பு உள்ளது, பிறப்பு - இறப்பு, சுக - துக்கம் உள்ளது. ஈச்வரம் வரம்பற்றது, பிறப்பு - இறப்பு இல்லாதது, எப்போதுமே ஆனந்தமாக இருப்பது. ஆனால், இரண்டும் ஒன்று என்பது முரண்பாடாக இல்லையா என்று கேள்வி எழுப்பி இந்த அஞ்ஞானத்தைப் போக்க குருவின் போதனை தேவைப்படுகிறது என்கிறார் வேதாந்தத்தில் கரைகண்ட சுவாமி தயானந்த சரஸ்வதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com