பணத்தினைப் பெருக்கு! ஏன்? எப்படி? எதற்கு?

பணத்தினைப் பெருக்கு! ஏன்? எப்படி? எதற்கு? - சீனி.வரதராஜன்; பக்.256; ரூ.200; வி.மோகனா, பிளாட்-323, சித்தார்த் நட்டுரா, 40, வடக்குப்பட்டு பிரதான சாலை, பெல்நகர், மேடவாக்கம், சென்னை-600100  
பணத்தினைப் பெருக்கு! ஏன்? எப்படி? எதற்கு?

பணத்தினைப் பெருக்கு! ஏன்? எப்படி? எதற்கு? - சீனி.வரதராஜன்; பக்.256; ரூ.200; வி.மோகனா, பிளாட்-323, சித்தார்த் நட்டுரா, 40, வடக்குப்பட்டு பிரதான சாலை, பெல்நகர், மேடவாக்கம், சென்னை-600100  
இவ்வுலகில் நாம் நலமாக வாழ பணம் அவசியம். அந்தப் பணத்தை ஏன் ஈட்ட வேண்டும், அதை எப்படிப்  பெருக்குவது, அதை எதற்காகப் பயன்படுத்துவது என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களை 
திருக்குறள் கருத்துகளால் தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர்.
தனது கருத்துகளுக்கு வலுச்சேர்க்க,  வேதாகமம், திருக்குர்ஆன், தமிழ் இலக்கியங்கள், நிபுணர்களின் கருத்துகளையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டுகிறார். 
தீதின்றி வந்த பொருளால் மட்டுமே அறத்தோடு கூடிய வாழ்வும் இன்பமும் பெற முடியும் என்பதை குறளின்வழி விளக்குகிறார். எப்படி வேண்டுமானாலும் வாழ்வது வாழ்க்கையல்ல; அதேபோல எப்படி வேண்டுமானாலும் ஈட்டுவது பொருளுமல்ல என்பதை பொட்டில் அடிப்பதுபோலச் சுட்டிக் காட்டுகிறார்.
இந்நூலில் வள்ளுவரின் பொருளாதாரம் தொடர்பான 120 குறள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. "பொருளீட்டுவதன் பயன் பொருளற்றவருக்கு உதவும் ஈதலே' என்று கூறும் நூலாசிரியர், அதற்கு உறுதுணையாக
மணிமேகலைக் காப்பிய மேற்கோளுடன், வாரன் பஃபெட்டின் தான தருமங்களையும் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
ஈட்டிய பொருளை பசிப்பிணி நீக்கச்  செலவிடுதலே ஒருவன் சேர்த்துவைக்கும் அழியாக் கருவூலம் என்னும் குறளின் கருத்தை விளக்க வரும் நூலாசிரியர், இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாது கிடக்கும் பலகோடி நிதி, அதன் உரிமையாளர்களுக்கு உதவுவதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறள் விளக்கங்களை ஆங்கிலத்திலும் அளித்திருப்பது சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com