மகத்தான பேருரைகள்

மகத்தான பேருரைகள் -பெ.சுபாசு சந்திரபோசு; பக்.240; ரூ.200; அன்னம், தஞ்சாவூர்-7 ;  04362- 239289.
மகத்தான பேருரைகள்

மகத்தான பேருரைகள் -பெ.சுபாசு சந்திரபோசு; பக்.240; ரூ.200; அன்னம், தஞ்சாவூர்-7 ;  04362- 239289.
தத்துவஞானிகள், அரசியல் சிந்தனையாளர்கள், பகுத்தறிவுவாதிகள், எழுத்தாளர்கள்,  சமூகச் சீர்திருத்தவாதிகள், சமயவாதிகள், அரசியல் மேதைகள், சட்ட வல்லுநர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள் என 25 ஆளுமைகள் ஆற்றிய மகத்தான பேருரைகளின் தொகுப்பு இந்நூல்.
"இந்த சிறைவாசத்தைக் கண்டு நான் அஞ்சப் போவதில்லை. என்னை தண்டியுங்கள்.  அது எனக்குப் பொருட்டல்ல.  வரலாறு என்னை விடுதலை செய்யும்' -  இது கியூபாவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்து 26 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட  பிடல் காஸ்ட்ரோவின் வீர உரை.
"ஞான நிலை எய்துவது பற்றி பலரும் பேசுகிறார்கள். ஞானநிலை எய்த காலம் தேவைப்படுமா என்ன?  காலம் என்பதை நாம் உருவாக்குகிறோம்.  பயமே இல்லாத மனிதன் முற்றிலுமாக வித்தியாசமானவனாகத் திகழ்கிறான். எந்த கடவுளும் அவனுக்குத் தேவைப்படுவதில்லை' - இது ஜே.கே என்று அறியப்படும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சென்னை வசந்த விஹாரில் ஆற்றிய  தத்துவ உரை. 
"நாளைக்காக  ஒரு போதும் கவலைப்படாதீர்கள். நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும்.  அந்தந்த  நாளுக்கு அதனதன் பாடு போதும்' - இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு செய்த மலைப்பிரசங்கம். 
காந்தி, புத்தர், ஆபிரகாம் லிங்கன், விவேகானந்தர்,  ஜவஹர்லால்  நேரு, இந்திரா காந்தி,  அண்ணாதுரை,  ஓஷோ, மேரி கியூரி உள்ளிட்டோரின்  குறிப்பிடத்தக்க உரைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.  ஆளுமை
களின் பேருரைகள் காலம், இடம், மொழி கடந்து என்றும் பேசப்படும், படிக்கப்படும் சமூக ஆவணங்கள் என்பதில் ஐயமில்லை. பேச்சாளர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பெரிதும் பயன்படும் நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com