ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்

ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல் - இரா.சர்மிளா; பக்.115; ரூ.120;  காவ்யா, சென்னை-24;  044- 2372 6882 .
ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல்

ஸ்டெம் செல் ஓர் உயிர் மீட்புச் செல் - இரா.சர்மிளா; பக்.115; ரூ.120;  காவ்யா, சென்னை-24;  044- 2372 6882 .
மனித உடலானது சுமார் 200-க்கும் மேற்பட்ட செல் வகைகளால்  அமைந்தது. இவை அனைத்தும் முதன்மைச் செல்களில் இருந்தே உற்பத்தியாகின்றன.
தசைச்செல்கள், நரம்புச் செல்கள், இரத்த செல்கள்  ஆகியவை  ஸ்டெம் செல் என்று  அழைக்கப்படுகின்றன. பிற செல்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முதிர்ச்சியடைந்துவிடும். ஆனால் ஸ்டெம் செல்கள் மீண்டும் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் தன்மை படைத்தது.  குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியிலிருந்து எடுக்கப்படும் இந்த ஸ்டெம் செல்லை பாதுகாத்து வைத்துக் கொண்டால்,   நீரிழிவு நோய், புற்றுநோய், தண்டுவடப் பிரச்னை,  இதயநோய் போன்ற பல நோய்களிலிருந்து மீளலாம் என்று ஸ்டெம் செல் தொடர்பான பல விஷயங்களை இந்நூல் சொல்கிறது. 
ஸ்டெம் செல்லின் வகைகள்,  அவற்றைப் பாதுகாக்கும் ஸ்டெம் செல் வங்கிகள்,     புற்றுநோயை நீக்க ஸ்டெம் செல் எவ்வாறு பயன்படுகிறது?  ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் உலகில் உள்ள பல நாடுகள் எந்த அளவுக்குப் பங்களித்துள்ளன? ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி நீரிழிவு நோயைக் குணப்படுத்த முடியுமா? என்பன போன்ற ஸ்டெம் செல் தொடர்பான பல கேள்விகளுக்கு  விடையளிக்கும் சிறந்த நூல்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com