இது சிக்ஸர்களின் காலம்

இது சிக்ஸர்களின் காலம் - ராம் முரளி; பக்.224; ரூ.250; யாவரும் பப்ளிஷர்ஸ், 214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், வேளச்சேரி, சென்னை- 600 042.
இது சிக்ஸர்களின் காலம்

இது சிக்ஸர்களின் காலம் - ராம் முரளி; பக்.224; ரூ.250; யாவரும் பப்ளிஷர்ஸ், 214, மூன்றாவது பிரதான சாலை, புவனேஸ்வரி நகர், வேளச்சேரி, சென்னை- 600 042.
 தற்போது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தொடங்கி நடைபெறும் நிலையில் கிரிக்கெட் சீசன் உச்சகட்டத்தில் உள்ளது.
 கிரிக்கெட் ஆட்டங்களில் துரிதமாக ரன்களைக் குவிக்க பவுண்டரிகள், சிக்ஸர்கள் உதவுகின்றன. தற்போது ஏராளமான சிக்ஸர்கள் அடிக்கப்படுவதால், "இது சிக்ஸர்களின் காலம்' என நூலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது போலும்.
 தற்காலத்தில் கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் விராட் கோலி, தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன் (இந்தியா) கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்), பாபர் ஆஸம் (பாகிஸ்தான்), ஏபி டி வில்லியர்ஸ், டூபிளெஸ்ஸிஸ் (தென்னாப்பிரிக்கா), ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து), மார்ட்டின் கப்டில் (நியூஸிலாந்து) ஆகிய பிரபல வீரர்கள் குறித்து நூலில் எழுதப்பட்டுள்ளது.
 குறிப்பாக ஒவ்வொரு வீரரின் இளமைக் காலம், கிரிக்கெட்டில் அவர்களது வளர்ச்சி, அணிகளில் இடம் பெற அவர்கள் நடத்திய போராட்டங்கள், சாதனைகள், குடும்பம், சர்ச்சைகள் என அனைத்தையும் இந்நூல் விவரிக்கிறது.
 கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்துள்ள தமிழகத்தில் புகழ் பெற்ற 10 கிரிக்கெட் வீரர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய இந்நூல், முழுமையான தகவல் களஞ்சியமாக, ரசிகர்களை ஈர்க்கும்விதத்தில் உள்ளது என்றால் அது மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com