தமிழில் சுயசரித்திரங்கள்-தொகுப்பாசிரியர்

தமிழில் சுயசரித்திரங்கள்-தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; பக்.334; ரூ.290;  சாகித்திய அகாதெமி, சென்னை-18;  044 - 2431  1741.
தமிழில் சுயசரித்திரங்கள்-தொகுப்பாசிரியர்

தமிழில் சுயசரித்திரங்கள்-தொகுப்பாசிரியர்: சா.கந்தசாமி; பக்.334; ரூ.290;  சாகித்திய அகாதெமி, சென்னை-18;  044 - 2431  1741.

துபாஷி ஆனந்தரங்கப் பிள்ளை, வ.உ.சிதம்பரம் பிள்ளை, உ. வே.சாமிநாதையர், சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, தி.செ.செள.ராஜன், சுத்தானந்த பாரதியார், ம.பொ.சிவஞானம், நெ.து. சுந்தர  வடிவேலு, கலைஞர் மு.கருணாநிதி, த. ஜெயகாந்தன் ஆகிய 12 பேர் எழுதிய சுயசரித்திரங்களின் சிறப்பான பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சுயசரித்திரங்களை எழுதியவர்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை அழகாக விவரித்துள்ளார் நூலாசிரியர். 
நூலைப் படிக்கும்போது அந்தந்த காலசூழலின்  வரலாறு, மொழி நடை, அரசியல், சமூக, கலாசாரத்தை நாம் அறிய முடிகிறது. சுப்பிரமணிய பாரதியை,  திரு.வி.க., ராமலிங்கம் பிள்ளை ஆகியோர் சந்தித்த தருணங்கள், கும்பகோணத்துக்கு மாற்றலாகி வந்த முன்சீப் சேலம் ராமசுவாமி முதலியாரை உ.வே.சா. சந்தித்த தருணம், அப்போது முதலியாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறியது, அத்தகைய சூழல் தன்னை, ஓலைச் சுவடிகளுக்குள் ஒளிந்திருந்த பழைய நூல்களைத் தேடிப் பிடித்து வரிசைப்படுத்தி, பிழை திருத்தி அச்சேற்றுவதை வாழ்நாள் தொண்டாக மாற்றியமைத்தது என்ற உ.வே.சா.வின் பதிவு ஆகியன இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 
பாரதியாரின் கவிதையில் எழுதப்பட்ட சுயசரித்திரம், ம.பொ.சிவஞானத்தின்  போராட்டங்கள்,  கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் இருந்த ஆழமான நட்பு, 24.12.87 அன்று அதிகாலை எம்ஜிஆர் மறைந்த செய்தி கேட்டு உடனடியாக ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று கருணாநிதி அஞ்சலி செலுத்தியது என பலர் அறிந்திராத சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
சுயசரித்திரம் எழுதியவர்கள் மறைந்தாலும், அவர்களின் பதிவுகள் படைப்பிலக்கியத்தில் கலந்து காலமெல்லாம் வாழும் என்பதற்கு இந்நூலே சாட்சி.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com