பள்ளி தோற்றுவிட்டதா?

பள்ளி தோற்றுவிட்டதா? - சிந்தை ஜெயராமன்; பக்.96; ரூ.200; வினோத் பதிப்பகம், திருநின்றவூர்; ) 044- 2639 0525.
பள்ளி தோற்றுவிட்டதா?

பள்ளி தோற்றுவிட்டதா? - சிந்தை ஜெயராமன்; பக்.96; ரூ.200; வினோத் பதிப்பகம், திருநின்றவூர்; ) 044- 2639 0525.
 "பள்ளிகள் தொழிற்கூடங்களுக்கு ஆட்களைத் தயார்ப்படுத்தும் இடம் அல்ல. பள்ளிப் படிப்பு என்பது வாழ்வியல் சிந்தனையை மையப்படுத்தி இருக்க வேண்டும்' என்ற அடிப்படையில் கல்வி கற்பிக்கும் முறையில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.
 உயர் கல்வியையும், தொழிற்சாலைகளையும் கவனத்தில் வைத்து புத்தகங்களை உருவாக்குவதை நிறுத்த வேண்டும்.
 குழந்தைகளின் தேவை, ஆர்வத்திற்கு ஏற்ற கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அடிப்படை அறிவை வளர்க்கும் படித்தல், கவனித்தல், திருத்துதல், டிக்டேஷன், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.
 நடைமுறையில் இருக்கும் கல்வி கற்பிக்கும் முறைகள் மாற்றப்பட வேண்டும். மாணவர்கள் நேரடியாகப் பார்த்து கற்றுக் கொள்வது, நாடகம் உட்பட காட்சி ஊடகங்களின் வழியாக கற்றுக் கொள்வது, செய்முறைப் பயிற்சிகளின் மூலம் கற்றுக் கொள்வது,
 விளையாட்டின் மூலம் கற்றுக் கொள்வது என கற்கும் முறைகளில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களின் அவசியத்தை இந்நூல் வலியுறுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com