முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய (புதினம்)

முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய (புதினம்) - கருவூர் கன்னல்; பக்.200; ரூ.150; குறள்வீடு, 3/3, பாரதிதாசன் நகர், தான்தோன்றி மலை, கரூர்-639 007.
முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய (புதினம்)

முள்ளி வாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய (புதினம்) - கருவூர் கன்னல்; பக்.200; ரூ.150; குறள்வீடு, 3/3, பாரதிதாசன் நகர், தான்தோன்றி மலை, கரூர்-639 007.
 ஒட்டக்கூத்தன் தான் படித்த கல்லூரியில் துணைமுதல்வராகவும், ஆங்கிலத்துறைத் தலைவராகவும் இருந்த கிருட்டிணன் நம்பூதிரியுடன் நட்பு கொள்கிறான். அது கடைசி வரை நீடிக்கிறது. கரூவூர் கன்னல் எழுதிய "முள்ளிவாய்க்கால் முதல் இலாசுஏஞ்சல்சு முடிய' புதினம் கிருட்டிணன் நம்பூதிரியை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
 கேரளாவில் இடதுசாரி இயக்கத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோரை விமான விபத்தொன்றில் கிருட்டிணன் நம்பூதிரி இழந்துவிடுகிறார். நண்பரின் சிபாரிசின் பேரில் அமெரிக்காவுக்குப் பயணமாகிறார். கூடவே ஒட்டக்கூத்தனும் செல்கிறான். கிருட்டிணன்
 நம்பூதிரி இலாசு ஏஞ்சல்சு கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராகிறார். அதோடு ஆங்கிலத்தில் புதினங்கள் எழுதி அந்நாட்டவர் விரும்பும் எழுத்தாளராகிவிடுகிறார்.
 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்திடம் சிக்கி வாழ்க்கையைத் தொலைத்த சிவசக்தி என்கிற "தமிழ்மது' மன நோயாளியாகிறாள். சிகிச்சைக்காக சிறப்பு மனநல மருத்துவரைக் காண இலாசு ஏஞ்சல்சுக்கு வந்த அவளை கிருட்டிணன் நம்பூதிரி சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.
 தமிழீழ விடுதலைக்காகப் போராடும் தமிழ்ப் போராளிப் பெண்கள் இராணுவத்தினரிடம் சிக்கிச் சீரழிவதும், சிங்கள ராணுவத்தினர் செய்த அட்டூழியங்களும் பிற்பகுதியில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
 அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் நம்பூதிரியின் மனைவி தமிழ்மது மரணமடைகிறாள். கிருட்டிணன் நம்பூதிரி திருச்சி திரும்பிவிடுகிறார் என்பதோடு கதை முடிகிறது.
 நாவலாசிரியருக்கு திருக்குறள், அபிராமி அந்தாதி, மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றின் மீதான பரிச்சயம் உள்ளதை நாவல் முழுவதும் காண முடிகிறது.
 அச்சுப் பிழைகள் அதிகம் உள்ளன. நூலின் தலைப்பு அட்டையில் ஒன்றாகவும், உள்பகுதியில் வேறாகவும் இருந்திருப்பதையாவது கவனித்திருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com