உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு - க.மணி; பக்.170; ரூ. 150; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி.நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை -641 015.
உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு - க.மணி; பக்.170; ரூ. 150; அபயம் பப்ளிஷர்ஸ், 19, ஏ.கே.ஜி.நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம், கோவை -641 015.
உலகில் உயிரினம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கான பதிலை விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு செல் உயிரியாகத் தோன்றிய உயிரினம், பலவித பரிணாமங்களை அடைந்து இன்றைய மனித வடிவை அடைந்திருக்கிறது என்பது பரிணாமக் கொள்கை.
ஆயினும் இதை மறுதலிப்பவர்களும் உண்டு.
உலகம் உருண்டை என்பதை ஏற்கவே பலநூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. பிறகு பொது சார்பியல் கோட்பாடு உருவாகி இன்றைய நவீன உலகிற்கு வழி சமைத்தது. அதேபோல டிஎன்ஏ மூலக்கூறுகள் குறித்த கண்டுபிடிப்புகள் நவீன உயிரியலின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன.
இத்தகைய பல்வேறு சிந்தனைகளைத் தொகுத்து நூலாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர்.
உயிரியல் துறையில் உழைத்த பலநூறுவிஞ்ஞானிகளை அறிய இந்நூல் உதவிகரமாக இருக்கிறது.
தனது கருத்தாக எதையும் திணிக்காமல், அறிவியல் கோட்பாடுகளையும், சிந்தனையாளர்களையும், ஆன்மிகக் கருத்துகளையும் ஆங்காங்கே தூவிச் செல்கிறார் ஆசிரியர். புதியன விரும்பும் வாசகர்களுக்கான நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com