1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி - நூற்றுக்கணக்கான ஜாதிகள் மற்றும் தீண்டாமையினால் - சி.கண்ணன்; பக்.146; ரூ.150; நோஷன் பிரஸ், பழைய எண்.38, புதிய எண்.6, மெக்நிகல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31.
1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி

1947 வரை இந்தியாவில் அந்நியர் ஆட்சி - நூற்றுக்கணக்கான ஜாதிகள் மற்றும் தீண்டாமையினால் - சி.கண்ணன்; பக்.146; ரூ.150; நோஷன் பிரஸ், பழைய எண்.38, புதிய எண்.6, மெக்நிகல்ஸ் ரோடு, சேத்துப்பட்டு, சென்னை-31.
 எந்த விஷயத்தையும் ஒரு புதிய கோணத்தில் பார்த்து, மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. உதாரணமாக ஜாதி குறித்த நூலாசிரியரின் பார்வையைக் கூறலாம்.
 "வர்ணமும் ஜாதிகளும் வட இந்தியாவில் ஏற்படாமல் இருந்திருந்தால், வட இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்புகள் தோல்வியில்தான் முடிந்திருக்கும்'.
 "ஐரோப்பாவில் சுமார் 30 கோடி மக்களும், சைனாவில் சுமார் 140 கோடி மக்களும், அமெரிக்காவில் சுமார்30 கோடி மக்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஜாதி தேவையில்லாதபோது இந்தியர்களுக்கு மட்டும் ஜாதி எதற்கு?'
 "ஜாதிகளை வேண்டாம் என்று நீக்கிவிட்டால் உலக எதிர்காலத்தை நிர்ணயிப்பது உலக மக்கள் தொகையில் 19.4% உள்ள சீனர்களும், உலக மக்கள் தொகையில் 17.5% உள்ள இந்தியர்களும்தான்'
 ஜாதி குறித்த இத்தகைய கருத்துகளைப் போலவே மதமாற்றம், பெண்களின் முன்னேற்றம், வெளிநாட்டு நிதி, வழிபாட்டு மொழி ஆகியவை குறித்த நூலாசிரியரின் கருத்துகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com