சத்சங்கம்

சத்சங்கம் - வெ.இறையன்பு; பக்.160; ரூ.150; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; ) 044- 2625 1968.
சத்சங்கம்

சத்சங்கம் - வெ.இறையன்பு; பக்.160; ரூ.150; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; ) 044- 2625 1968.
 குருவுக்கும் சீடனுக்கும் இடையில் நிகழும் உரையாடல் வடிவில் ஆன்மிகம் குறித்த தெளிவான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. ஆன்மிகம் என்பது வழிபாடு என்கிற செயல்முறையோடு நின்றுவிடுவதில்லை.
 யார் அச்சத்திலிருந்து விடுபடத் தொடங்குகிறார்களோ அவர்களே ஆன்மிகத்தில் அடியெடுத்து வைக்கிறார்கள் என்று பொருள். அவர்கள் எதிர்காலம் குறித்துப் பயப்படமாட்டார்கள்.
 மகிழ்ச்சியால் ஆன்மிகமே தவிர, மகிழ்ச்சிக்காக ஆன்மிகம் இல்லை.
 ஆன்மிகம் என்பதே அன்பு. எதிரி என்று யாரும் இல்லாத நிலையே ஆன்மிகம். நம்மைப் பார்த்து யாரும் பொறாமைப்படாதவாறு வாழ்வதே சிறந்த ஆன்மிக வாழ்க்கை.
 நம் கோபம் எங்கிருந்து வருகிறது, நம் பயம் எங்கிருந்து முளைக்கிறது என்று நம்மை நாமே பார்த்துக் கொள்ள அகமனத்தின் முன்பு கண்ணாடியைத் தூக்கிக் காட்டும் வேலையை மட்டும் ஆன்மிகம் செய்கிறது.
 எல்லாச் செயற்கைச் சுவர்களையும் ஆன்மிகம் கரைத்து பிரபஞ்ச நம்பிக்கைக்கும், பிரபஞ்ச மனத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும். அப்போது எல்லா பேதங்களும் நீங்கிவிடும்.
 இவ்வாறு ஆன்மிகம் தொடர்பான பல கருத்துகளை விரிவாகக் கூறி, உண்மையான ஆன்மிக வாழ்வு எது என்று நமக்கு அடையாளம் காட்டும் சிறந்த நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com