சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள் - வாதூலன்; பக்.223; ரூ.140; ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை-4;  044- 2464 1314. 
சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள் - வாதூலன்; பக்.223; ரூ.140; ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை-4;  044- 2464 1314. 

கர்நாடக சங்கீத உலக அனுபவங்களின் தொகுப்பு இந்தநூல். மதுரை மணி, செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யர் போன்ற  மேதைகளின் இசை வாழ்க்கையின் கீற்றுகள், அத்துடன் சினிமாவில் சாஸ்திரிய இசை நுணுக்கங்கள் என பல விதமான துக்கடா ராகமாலிகையாக இந்தப் புத்தகத்தை கோத்திருக்கிறார் வாதூலன்.

இசைக் கலையில் தனக்கு உள்ள குறைகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளும் அவர், கேள்வி ஞானத்தின் மூலமாக கர்நாடக சங்கீதம் குறித்த ஞானத்தை வளர்த்துக் கொண்ட விதம் நூலில் தெரிகிறது. சங்கீத லட்சண நுணுக்கங்கள் தெரியாமல் இருப்பது நல்ல இசையை ரசிக்கத் தடையில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.  மதுரை மணி, செம்மங்குடி பற்றிய இசை, வாழ்க்கை நினைவுகள் ரசிக்கும்படி உள்ளன. விமர்சனத்துக்குப் பெயர்போன கல்கி, சுப்புடு பற்றிய நினைவுக்கீற்றுகளும் அபாரம்.

கர்நாடக இசையில் பரிச்சயக் குறைவுள்ளவர்களின் வழக்கமான ஆதங்கம், "ராகம் புரியவில்லை' என்பது. ராகம் கண்டுபிடிக்கும் போட்டி வைத்துப் பரிசும் கொடுத்தது பற்றியதுதான் முதல் கட்டுரை. அதில் கலந்து கொண்ட அனுபவத்தை நகைச்சுவை உணர்வுடன் எழுதியுள்ளார். நல்ல இசையை ரசிக்க அந்த வகையான ஞானம் முக்கியத் தகுதியே இல்லை என்பதைப் பல இடங்களில் உணர்த்துகிறார். கர்நாடக இசையைக் கேட்கக் கேட்க, ரசனை வளரும், ஞானமும் வளரும் - அதற்கு ஊக்கம் தரும் நூலாக இதைக் கொள்ளலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com