மயன்கள் அறிவியலும் வரலாறும்

மயன்கள் அறிவியலும் வரலாறும் - எஸ்.குருபாதம்; பக்.208; ரூ.160; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108;  044 - 2536 1039.
மயன்கள் அறிவியலும் வரலாறும்

மயன்கள் அறிவியலும் வரலாறும் - எஸ்.குருபாதம்; பக்.208; ரூ.160; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108;  044 - 2536 1039.

மத்திய அமெரிக்காவில் தோன்றி மறைந்த மயன் என்ற இனத்தைப் பற்றி ஆழமான ஆராய்ச்சிகள் செய்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.  சிந்து சமவெளி நாகரிகம்,  நைல் நதி நாகரிகம் அல்லது அவற்றுக்கு சற்று பிற்பட்ட காலத்தில் மயன் நாகரிகம் இருந்துள்ளதாக கருதும் நூலாசிரியர்,  இந்த மயன்கள் இந்தியாவிலிருந்தும், நாகர்கள் இலங்கையிலிருந்தும் வெளியேறி மத்திய அமெரிக்க பகுதியில் குடியேறியதாகவும், அங்கு  உலகத்தின் தலைசிறந்த நாகரிகத்தை உருவாக்கியதாகவும்  கூறுகிறார்.  

ஆதிகாலத்தில் மக்கள் இலை, தழைகளை ஆடையாக அணிந்திருந்த காலத்தில் மயன்கள் ஆடை அணிந்ததாகக் குறிப்பிடும் நூலாசிரியர்,  பெண்கள் கழுத்திலிருந்து கணுக்கால் வரை புலித்தோலினாலும், பருத்தி நூலினாலும் நெய்யப்பட்ட ஆடைகளை அணிந்ததாகக் கூறுகிறார்.  அதற்கான ஆதாரங்களாக கோயில் சிலைகளில், மண்பாண்டங்களில் காணப்படும் ஓவியங்களில் ஆடைகள் இருப்பதை எடுத்துக்காட்டுகிறார். 

மயன்களுடைய கணிதமுறைகள்தான்  பிற்காலத்தில் அரேபியர்களால் ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.  அறிவியல், கணிதம், வானியல், அரச நிர்வாகம், நாகரிகம், கட்டடக் கலை, விளையாட்டு, இசை, நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் சேகரிப்பு ஆகியவற்றில் மயன்கள் சிறப்பான அறிவு பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். 

கி.மு.700 -400 காலகட்டத்தில் வாழ்ந்த மயன்கள்  800 சித்திர வடிவ எழுத்துகளை உருவாக்கியிருக்கிறார்கள்.  மயன்களின் கட்டடக் கலை வளர்ச்சி கி.பி.600 -800 காலகட்டத்தைச் சேர்ந்தவையாகும். அவர்களுடைய கட்டடங்களில் பாம்பு, புலி, கழுகு, யானை முகம் கொண்ட மழைக்கடவுள்களை சிலைகளை  வடிவமைத்திருக்கிறார்கள்.   மரம், கல், எலும்பு போன்றவற்றைக் கட்டடம் கட்டப் பயன்படுத்தினார்கள். கட்டடம் கட்ட சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் காலண்டர்கள், எழுத்துகள், எண்கள் எல்லாவற்றையும் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.  இவ்வாறு மயன்கள் குறித்த பல தகவல்கள் வியப்பூட்டுகின்றன.  மயன்களின் வரலாற்றை மிக அற்புதமாக இந்நூல் விளக்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com