செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ் - ஜி.ஜான் சாமுவேல்; பக்.172; ரூ.120; முல்லை நிலையம், சென்னை-17;  044 - 2523 4556.
செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ் - ஜி.ஜான் சாமுவேல்; பக்.172; ரூ.120; முல்லை நிலையம், சென்னை-17; 044 - 2523 4556.
தொன்மை, தனித்தன்மை,  பலமொழிகளுக்கும் தாயாக அமைந்த தன்மை, நாகரிகம் மேம்பாடு அடைந்த ஓர் இனத்தின் பண்பாடு,  கலை, அனுபவ உணர்வுகளின் முழுவெளிப்பாடாக அமைந்த இலக்கியங்களைப் பெற்றிருத்தல், தனித்து இயங்கும் ஆற்றல்,  தனித்தன்மை வாய்ந்த உயர்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகள், தனிச்சிறப்பான மொழிக் கோட்பாடுகள் கொண்டிருக்கும் ஒரு மொழி செம்மொழியாகக் கருதப்படும். தமிழுக்கு  அந்தத் தன்மைகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றன என்பதை இந்நூல் விளக்குகிறது. 
வெறும் இலக்கியமொழியாக மட்டுமல்லாமல், நாட்டுப்புற இலக்கிய மரபுகளையெல்லாம்  காலப்போக்கில் முறைப்படுத்தி, நெறிப்படுத்தி, செவ்வியல் இலக்கிய மரபில் இணைத்துக் கொள்வதற்கான எடுத்துக்காட்டுகளாகத்தான்  சிலப்பதிகாரத்திலும், பக்தி இலக்கியப் பாடல்களிலும் காணப்படும் நாட்டுப்புற இலக்கிய இணைப்பினைக் காணலாம் என்கிறார் நூலாசிரியர்.  
தமிழைச் செம்மொழியென ஏற்றுக் கொள்வதற்கு எடுத்துக்  கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றியும் நூல் விரிவாகப்  பேசுகிறது. தமிழிலிருந்தும் பிற மொழிகளுக்கும், பிறமொழிகளில் இருந்து தமிழுக்கும்  மொழிபெயர்ப்புகள் செய்யப்பட வேண்டியதன் தேவையை நூல் வலியுறுத்துகிறது. 
செம்மொழி என்னும் தகுதி பிறரிடம் கேட்டுப்  பெறுவதோ, அல்லது ஊர்வலம் நடத்திப் பெறுவதோ அல்லது கோரிக்கைக்குரல் எழுப்பிப் பெறுவதோ அன்று; ஆக்கரீதியான  பணிகளில் ஈடுபட்டு, இந்த அங்கீகாரத்தைப்  பெற வேண்டும் என்கிற நூலாசிரியர்,  ஆக்கரீதியான பணிகளுக்கு எடுத்துக்காட்டாக ஆசியவியல் நிறுவனத்தைக் குறிப்பிடுகிறார். 
செம்மொழியான தமிழுக்கு இந்நூல் ஒரு சிறந்த பங்களிப்பாக மிளிர்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com