வெல்ல நினைத்தால் வெல்லலாம்

வெல்ல நினைத்தால் வெல்லலாம் - அ.அமல்ராஜ்; பக்.368; ரூ.300; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்; ) 0422- 2382614.
வெல்ல நினைத்தால் வெல்லலாம்

வெல்ல நினைத்தால் வெல்லலாம் - அ.அமல்ராஜ்; பக்.368; ரூ.300; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்; ) 0422- 2382614.
 வாழ்க்கையில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு விடை தரும் நூல். வெல்ல வேண்டும் என்று நினைத்தால் வெல்லலாம் என்றாலும் அப்படி நினைப்பதற்கே நம்மைத் தயார்ப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்நூல் மனதின், எண்ணத்தின், சொல்லின், செயலின், பழக்கத்தின் வல்லமைகளை மிக விரிவாக விளக்குகிறது.
 மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் எல்லாமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று இன்னொன்றின் மீது தாக்கம் ஏற்படுத்துபவை.
 எதிலும் கவனம் செலுத்த, நம்பிக்கை கொள்ள, சிந்திக்க, முடிவெடுக்க மனதைப் பழக்கப்படுத்தினால்தான், மனதை ஒருமுகப்படுத்தி அதன் ஆற்றலை வளர்த்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
 எண்ணங்கள் சமூகத்திலிருந்து ஏற்படலாம். நேர்மறையான எண்ணங்களை உருவாக்கினால்தான், வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். மனம், எண்ணம் ஆகியவற்றின் கூட்டால்தான் குணம் தோன்றுகிறது. நல்ல குணம் உடையவராக வாழ்தல் அவசியம்.
 பேசும்போது திட்டமிட்டுப் பேச வேண்டும். பொதுமேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல, தொலைபேசி உரையாடல்களுக்கும் கூட திட்டமிட வேண்டும். திறம்படச் செயலாற்றினால்தான் வெற்றி கிட்டும். நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காந்தியடிகள் தன் வாழ்க்கையில் பத்துவிதமான பழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றினார். இவ்வாறு மனம், எண்ணம், குணம், சொல், செயல், பழக்கம் ஆகியவற்றில் வல்லமை பெறுவதே வெற்றிக்கான திறவுகோல் என்பதை மிக எளிமையாக, விரிவாகச் சொல்கிறது இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com