சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 4; தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர்; பக்.552; ரூ. 200; ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை- 4; ) 044- 6462 1110.
சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை- பாகம் 4; தொகுப்பாசிரியர்: சுவாமி கமலாத்மானந்தர்; பக்.552; ரூ. 200; ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை- 4; ) 044- 6462 1110.
 சுவாமி விவேகானந்தர் குறித்த மிக உயர்ந்த அபிமானம் கொண்டவராக பாரதி விளங்கினார்.
 தான் நடத்திய பத்திரிகைகளிலும் பணிபுரிந்த பத்திரிகைகளிலும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விவேகானந்தரைப் போற்றி மகிழ்கிறார் பாரதி.
 அதுமட்டுமல்ல, விவேகானந்தரின் சீடர்களான சுவாமி அபேதானந்தரையும் சகோதரி நிவேதிதையையும், அவரது சகோதரர் பூபேந்திரரையும் தனிப்பாடல் புனைந்து வழிபட்டவர் பாரதி. மகாத்மா காந்தி, திலகர், நேதாஜி போன்ற பிற தேசியத் தலைவர்களைப் போலவே, தேசிய எழுச்சியின் ஊற்றுக்கண் விவேகானந்தர்தான் என்பதில் பாரதிக்கும் உறுதியான நம்பிக்கை இருந்தது.
 தொகுப்பாசிரியரின் பரந்த கல்வி ஞானம், விவேகானந்தர்- ராமகிருஷ்ணர் நூல்களில் பாண்டித்தியம் ஆகியவை நூல் முழுவதும் காணப்படும் ஒப்பீடுகளில் வெளிப்படுகிறது. பாரதியின் கட்டுரைத் தகவல்களைக் கூறும்போது, அதுதொடர்பாக விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் உபதேசங்களையும் தமிழ் இலக்கிய மேற்கோள்களையும் நயம்பட எடுத்துக்காட்டுகிறார் சுவாமி கமலாத்மானந்தர்.
 விவேகானந்தர் குறித்து பாரதியே எழுதியவை, விவேகானந்தருடன் பழகியவர்கள் குறித்த பாரதியின் கட்டுரைகள், பாரதியுடனும் ராமகிருஷ்ண மடத்துடனும் தொடர்பு கொண்டிருந்த சுவாமி விபுலானந்தர், தாகூர், பி.ஆர்.ராஜம் ஐயர், நஞ்சுண்ட ராவ், சுத்தானந்த பாரதி உள்ளிட்டோர் பற்றிய பிறரது ஆக்கங்கள் ஆகியவை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com