அக்ரஹாரத்து ஹெர்குலிஸ்

அக்ரஹாரத்து ஹெர்குலிஸ் - எஸ்.ஸ்ரீதுரை; பக்.200; ரூ.190; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
அக்ரஹாரத்து ஹெர்குலிஸ்

அக்ரஹாரத்து ஹெர்குலிஸ் - எஸ்.ஸ்ரீதுரை; பக்.200; ரூ.190; அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், 41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11.
 கடந்த 24 ஆண்டுகளாக நூலாசிரியர் எழுதிய சிறுகதைகளில் சில இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் ஒரு தெருநாய்க்கு உணவளிக்கிறார்கள். வீட்டைக் காலி செய்துவிட்டு அவர்கள் வேறு வீடு செல்லும்போது அந்தத் தெரு நாயையும் கூடவே அழைத்துச் செல்கிறார்கள். "ஜீவ யாத்திரை' சிறுகதை இது.
 குளிக்கும்போது பாத்ரூமில் கழற்றி வைத்த பூணூலை அணிய மறந்த ரங்கு அதற்காக தந்தையிடம் திட்டு வாங்குவதும், புதிய பூணூல் வாங்கச் சென்ற இடத்தில் போலியாக நடந்து நன்மதிப்பைப் பெறுவதும் நிகழ்கிறது. இதே பூணூல் பிரச்னைக்காகத் தந்தையிடம் நல்லபெயர் எடுத்த கூர்க்கா, உண்மையில் தந்தையிடம் பொய் சொல்லி நல்ல பெயர் எடுத்திருப்பதும் ரங்குவுக்குத் தெரிய வருகிறது. இது "அனாசரன்' கதையின் சாரம்.
 மனைவியின் வற்புறுத்தலுக்காக ஒரு திருமணத்துக்குச் சென்ற ஒருவர், மொய்ப் பணத்தைக் கொடுக்க காத்திருக்க முடியாமல் போவதைச் சொல்லும் "காத்திருந்து... காத்திருந்து...' சிறுகதை, ஜோலார்ப்பேட்டையிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் ஒருவனின் அன்றாடத் துன்பங்கள், விடுமுறை நாளிலும் தொடர்வதைச் சொல்லும் "ஜோலார்ப்பேட்டை' சிறுகதை. பேத்திக்கும் தாத்தாவுக்கும் உள்ள உறவைச் சொல்லும் "மாயா', ஜென்டில்மேன் என ஒருவரை உருவகித்து வைத்திருந்த ஒருவர், ஒருகட்டத்தில் அவர் ஜென்டில்மேன் இல்லை என்று தெரிய வந்தாலும் அதை நம்ப மறுக்கிற மனநிலையைச் சொல்லும் "ஜென்டில்மேன்' சிறுகதை என இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை, மனப்போராட்டங்களை மிக அருமையாகச் சித்திரிக்கின்றன.
 எந்தவொரு விஷயத்தையும் ஒருவிதமான சுவையான கிண்டல்தொனியில் சொல்லிச் செல்லும் நூலாசிரியரின் படைப்புத் திறன் வியக்க வைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com