நமது கடவுள் மனிதனே

நமது கடவுள் மனிதனே - சுவாமி விவேகானந்தரின்  உரத்த ஆன்மிகச் சிந்தனைகள் - தொகுப்பாசிரியர்: ஜாநிசிவம்; பக்.332; ரூ.250; ஜனனி நூல் பதிப்பு, 36, தியாகராய கிராமணி தெரு, தியாகராய நகர், சென்னை-17. 
நமது கடவுள் மனிதனே

நமது கடவுள் மனிதனே - சுவாமி விவேகானந்தரின்  உரத்த ஆன்மிகச் சிந்தனைகள் - தொகுப்பாசிரியர்: ஜாநிசிவம்; பக்.332; ரூ.250; ஜனனி நூல் பதிப்பு, 36, தியாகராய கிராமணி தெரு, தியாகராய நகர், சென்னை-17. 
மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த மத, பண்பாடு, கலாசாரப் பழக்கங்களை ஒதுக்கித் தள்ளாமல், தெய்வ பக்தியோடு கலந்த தேசபக்தியை வலியுறுத்தி விவேகானந்தர் ஆற்றிய உரைகளே அவரை இந்த உலகுக்கு அடையாளப்படுத்தின.
"என்னிடம் 100 வீர இளைஞர்களைக் கொடுங்கள். இந்த உலகையே மாற்றி காட்டுகிறேன்' என்றார் சுவாமி விவேகானந்தர்.  
அவர் போதித்த செய்திகள் அனைத்தும் அவரது குருவான சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சரின் கருத்தை எதிரொலிப்பதாகத்தான் இருந்தன. அந்த அளவுக்கு குருவின் மீது பற்று, நம்பிக்கை விவேகானந்தருக்கு இருந்திருக்கிறது. அது இந்நூலின் மூலம்  தெரிய வருகிறது.  
விவேகானந்தரின்  புரட்சிகரமான ஆன்மிகக் கருத்துகள் மட்டுமே  இந்த நூலில் தொகுத்து அளிக்கப்பட்டிருப்பது அருமை.   
சுவாமி விவேகானந்தரின்  கருத்துகளைத் தெரிந்து கொள்ள விரும்பும் ஒருவர் அதற்காக நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய தேவையைக் குறைத்து,    எளிதில் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com