தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்

தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும் - தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்; பக்.248; ரூ.275; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., நாகர்கோவில்-1; 04652 - 278525.
தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்

தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும் - தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்; பக்.248; ரூ.275; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., நாகர்கோவில்-1; 04652 - 278525.
தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை பல்வேறு கோணங்களில் தொகுத்துக் கூறும் முயற்சியாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
கலை இலக்கியம் பற்றி வெவ்வேறு பார்வை
களைக் கொண்ட கா.நா.சுப்ரமண்யம் கட்டுரையும் கா.சிவத்தம்பி கட்டுரையும், கோ.கேசவனின் கட்டுரையும், சுந்தரராமசாமியின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. ராஜ்கெüதமன், பிரமிள், எம்.ஜி.சுரேஷ், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், வீ.அரசு, இரா.கந்தசாமி, சுப்பிரமணி இரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் தமிழ்ச் சிறுகதைகளின் வெவ்வேறு போக்குகளைப் பற்றி பேசுகின்றன.
மணிக்கொடி காலத்தில் வெளிவந்த சிறுகதைகள், வணிக இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள், முற்போக்கு சிறுகதைகள், எந்தவித மையமும் இல்லாமல் எழுதப்பட்ட பின்நவீனத்துவ சிறுகதைகள் என தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்த இந்நூல் உதவும்.
தற்காலப் பெண் சிறுகதைகள், பின் நவீனத்துவச் சிறுகதைகள், தலித் சிறுகதைகள், அக உலகைச் சித்திரிக்கும் சிறுகதைகள் என தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றியும், இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்நூலில் உள்ள கட்டுரைகள் உதவுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com