உ.வே.சாமிநாதையர் அணிந்துரைகள்

உ.வே.சாமிநாதையர் அணிந்துரைகள்

உ.வே.சாமிநாதையர் அணிந்துரைகள் - சிறப்புப் பாயிரங்கள் - பதிப்பாசிரியர்:   கோ.உத்திராடம்; பக்.190; ரூ.160;   டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்,  சென்னை-90; -044-2491 1697. 

சங்க இலக்கியம்,  இலக்கணம்,  தலபுராணம், வரலாறு, ராமாயணம், இதிகாசம்,  நாடகம், சிற்றிலக்கியம், திரட்டு, மாத இதழ் எனப் பல்வேறு பிரிவுகளில் வெளியான நூல்களுக்கு உ.வே.சா. வழங்கிய பாயிரம்,  சிறப்புப் பாயிரம், பாராட்டுரை, அணிந்துரை, மதிப்புரை, நல்லுரை,  கடிதம்,  அபிப்பிராயம், நற்சான்றிதழ்,  சாற்றுக்கவி (120+87) ஆகியவை இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

சிவஞான யோகிகள் இயற்றிய "தேவோபாசனாதீபம்' நூலுக்கு எழுதிய சிறப்புப் பாயிரம்;  ஸ்ரீபாகவதம் சாமண்ணாசார்யர் தமிழில் மொழிபெயர்த்த "மஹாபாரதம்' (சாந்தி பர்வம்- நூலுக்கு வழங்கிய சிறப்புப் பாயிரம்; எம். ஆர். ஸ்ரீனிவாûஸயங்கார் இயற்றிய "நன்மதி வெண்பா'வுக்கு வழங்கிய நற்சாக்ஷிப்பத்திரம்;  மருவூர் ப்ரஹ்மஸ்ரீ கே.கேணேச சாஸ்திரிகள் இயற்றி, பதிப்பித்த "மனஸ்தத்துவம்' நூலுக்கு அபிப்பிராயம்;  "சிவநேசன்' மாதப் பத்திரிகைக்கு எழுதிய மதிப்புரை,  "ஆருத்ரா' ஆங்கிலப் பத்திரிகைக்கு எழுதிய அணிந்துரை என கிட்டத்தட்ட  நூற்றி இருபது நூல்களின் விவரங்களுடன்,   உ.வே.சா. வழங்கிய சிறப்புப் பாயிரங்கள், சாற்றுக்கவிகளும் (87- இறுதியில் தரப்பட்டிருக்கின்றன.  

வரகவி அ.சுப்ரமண்ய பாரதியின் "ஸ்வயம்ப்ரகாச விஜயம்' தமிழ் வசன நூலுக்கு வழங்கிய சிறப்புரையில், ""பெரியோர்களுடைய வரலாறுகளும் நல்லுபதேசங்களும் ஒருவரை நல்வழிப்படுத்துமென்று யாவரும் அறிந்ததே. அவர்கள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்கள். சிறந்த அனுபவத்தின் பயனாக அவர்கள் வாக்கிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு விஷயமும் யாவரும் பின்பற்றிப் பயனடைதற்கு ஏற்றதாகும்.  "ஸ்வயம்ப்ரகாச விஜயம்' என்னும் தமிழ் வசன நூலைப் படித்துப் பார்த்ததில் எனக்கு உண்டான ஸந்தோஷத்திற்கு எல்லையில்லை. மனித வாழ்க்கையின் பயனைப் பெறுவதற்கு இன்றியமையாத பல அரிய விஷயங்கள் இப்புத்தகத்தில் நிரம்பியிருக்கின்றன'' என்கிறார்.  இந்நூல் உ.வே.சா.வுடைய பன்முக ஆளுமையின் ஆழத்தைப் புலப்படுத்துகிறது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com