அணுவிலிருந்து ஆன்மா வரை

அணுவிலிருந்து ஆன்மா வரை-மனிதனின் கதை - அசார்; பக்.176; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-2434 2810. 
அணுவிலிருந்து ஆன்மா வரை

அணுவிலிருந்து ஆன்மா வரை-மனிதனின் கதை - அசார்; பக்.176; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-2434 2810.
 பூமி, பஞ்சபூதங்கள், ஆதி மனிதனின் தொன்மை வரலாறு, பரிணாம வளர்ச்சி, உயிர், ஆன்மா என்பதன் சிறப்புகளைப் பற்றி இந்நூல் கூறுகிறது.
 "மனிதன் என்னும் நிகழ்வு', "அறிவியலும் அதற்கு அப்பாலும்' , "நேரம் என்னும் மர்மம்'ஆகியவை உள்ளிட்ட 19 அத்தியாயங்களிலும் வியக்க வைக்கும் வகையில் பல தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்த உலகம் நமக்குப் பின்னர் வரப்போகும் மக்களுக்கும், பொதுவாக எல்லா உயிர்களுக்கும் ஏற்றவாறு தொடர்ந்து நிலைபெற்று இருக்க வேண்டுமானால் மனித இனம் தற்கால வாழ்க்கை முறைகளை எவ்வாறு மாற்றிக் கொண்டுவாழ வேண்டும் என்பதன் அவசியத்தை நூலாசிரியர் எடுத்துக் கூறுகிறார்.
 குழந்தை பிறந்து பல ஆண்டுகள் கழிந்த பின்னரே முழு மன வளர்ச்சியும், தன்னைக் காத்துக் கொள்ளும் திறனும் பெறுவது ஏன் என்பதற்கு சிறந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
 இன்றையச் சூழலில் மக்கள் அன்பு, காதல் ஆகியவற்றை அணுகும்விதம் பற்றியும், அவற்றைப் பற்றி உண்மைக்கு மாறாக ஊடகங்கள் பரப்பும் செய்திகளைப் பற்றியும் பல அரிய தகவல்களை நூலாசிரியர் கூறியுள்ளார்.நமது உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும், தனிமை உணர்வை வெல்வதற்கும் இந்த நூலில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com