திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்: ஓர் ஆய்வு

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்: ஓர் ஆய்வு - அ.நிகமத்துல்லாஹ்; பக்.368; 350; அ.நிகமத்துல்லாஹ், 14/2, எஸ்.என்.வி.நகர், ஹைகிரவுண்டு, திருநெல்வேலி-627011. 
திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்: ஓர் ஆய்வு

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்: ஓர் ஆய்வு - அ.நிகமத்துல்லாஹ்; பக்.368; 350; அ.நிகமத்துல்லாஹ், 14/2, எஸ்.என்.வி.நகர், ஹைகிரவுண்டு, திருநெல்வேலி-627011.
 நூலாசிரியர் தனது இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சமர்ப்பித்த ஆய்வேட்டின் நூல் வடிவம். திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் 1937 முதல் 2011 வரை 14 வெளிவந்துள்ளன. அவற்றில் 12 மொழிபெயர்ப்புகளை ஆய்வுக்காக நூலாசிரியர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
 திருக்குர்ஆன் திரும்பத் திரும்ப ஏன் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது? யாருக்காக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது? எந்தவிதமான நெறிமுறைகள், உத்திகளைப் பின்பற்றி மொழிபெயர்த்திருக்கிறார்கள்? மூலத்துக்கு மாற்றமின்றி இருத்தல், வடிவத்தைவிட கருத்துக்கு முன்னுரிமை தருதல் உள்ளிட்ட மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? தமிழில் திருக்குர்ஆனை மொழிபெயர்க்கும்போது ஏற்படும் பிரச்னைகள் எவை? என்பன உள்ளிட்ட பல நோக்கங்களுடன் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை நூலாசிரியர் ஆய்வு செய்திருக்கிறார்.
 இந்த மொழிபெயர்ப்புகளை அரபு மூலத்தோடு ஒப்பாய்வு செய்திருக்கிறார். அதேபோன்று, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குர்ஆனையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டு ஆய்வு செய்திருக்கிறார்.
 திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அரேபிய, இஸ்லாமிய கலாசாரச் சூழலுக்கும், தமிழ் கலாசாரச் சூழலுக்கும் பாலமிடும் பணியை ஆற்றுவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். கலாசார இடைவெளியை நிரப்பும் முயற்சியில் புதிய சொற்களைத் தோற்றுவிப்பதும், சில தமிழ்ச்சொற்களுக்குப் புதிய பொருளை ஏற்படுத்துவதும், சில சொற்களின் பொருளை விரிவாக்கம் செய்வதும் இம்மொழிபெயர்ப்பு பயணங்களில் நிகழ்ந்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர்.
 திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புப் பணியை ஒருங்கிணைக்கவும், சீராக்கவும் திருக்குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்பு ஆய்வு மையம் நிறுவப்பட வேண்டும் என்பது நூலாசிரியரின் விருப்பமாக இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com