இணை (நாவல்)

இணை (நாவல்) - இந்துசெல்லா; பக்.320; ரூ.350; யாவரும் பப்ளிஷர்ஸ், 24, கடை எண்.பி, எஸ்.ஜி.பி.நாயுடு காம்ப்ளக்ஸ், தண்டீஸ்வரம் பஸ்நிறுத்தம், பாரதியார் பூங்கா எதிரில், வேளச்சேரி மெயின்ரோடு, வேளச்சேரி, சென்ன
இணை (நாவல்)

இணை (நாவல்) - இந்துசெல்லா; பக்.320; ரூ.350; யாவரும் பப்ளிஷர்ஸ், 24, கடை எண்.பி, எஸ்.ஜி.பி.நாயுடு காம்ப்ளக்ஸ், தண்டீஸ்வரம் பஸ்நிறுத்தம், பாரதியார் பூங்கா எதிரில், வேளச்சேரி மெயின்ரோடு, வேளச்சேரி, சென்னை-42.
 தேவதாசி முறை நடைமுறையிலிருந்த காலந்தொட்டு சம காலம் வரை வழி வழியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை பெண்களை மையப்படுத்தி இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைமுறையிலும் பெண் கல்வி, குடும்ப வாழ்க்கை, சமூகப் பொருளாதார மாற்றங்கள், பெண்ணுரிமை, சமத்துவம், சமூக நீதி, சமகால அரசியல் ஆகியவை குறித்து இந்நாவலின் கதாபாத்திரங்கள் எடுத்தியம்புகின்றன.
 தனது வாழ்க்கைத் துணையை இழந்த ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஓர் ஆணோ பெண்ணோ தன் வாழ்நாள் முழுவதும் தனித்தே இருக்கும்போதும் சரி, அல்லது வேறொரு துணையை தேடிக்கொள்ளும்போதும் சரி அவர்களை சமூகம் எந்தக் கண்ணோட்டத்
 துடன் நோக்கும் என்பதை இந்நாவல் விவரிப்பதோடு மட்டுமல்லாது பிறருக்கு எந்த விதத்திலும் சிரமம் அளிக்காது, மனித மாண்புகளைப் பேணி தனி மனித சுதந்திரத்துடன் வாழவும் வலியுறுத்துகிறது.
 ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தமிழர் கலாசாரத்தை முற்றிலும் புறந்தள்ளாமலும், அதேநேரத்தில் உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்ட இந்த நவீன காலத்தில் கூட, குடும்ப அமைப்புக்குள் இருக்கும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டியும், அவரவருக்கு பிடித்தமான வாழ்க்கையை சுய மரியாதையுடன் வாழ வேண்டிய அவசியம் குறித்தும் இந்நாவலின் பல்வேறு கதாபாத்திரங்கள் உணர்த்துகின்றன.
 கிராமத்து கூட்டுக் குடும்பம், நகரத்து தனிக் குடும்பம், தொழில் மற்றும் கல்வியின் நிமித்தம் இடம்பெயர்தல், புலம் பெயர்தல் என கடந்த ஒரு நூற்றாண்டில் குடும்ப அமைப்பின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை இந்நாவல் மூலம் அறிய முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com