மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியும் நானும்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியும் நானும் - கவிஞர் காமகோடியன்; பக்.256; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810. 
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியும் நானும்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியும் நானும் - கவிஞர் காமகோடியன்; பக்.256; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810.
 திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் கால் நூற்றாண்டு காலம் நெருக்கமாகப் பழகிய கவிஞர் காமகோடியன் எம்.எஸ்.வியுடனான தனது அனுபவங்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.
 இயக்குநர் கே.எஸ்.மாதங்கன் மூலம் தனக்கு எம்.எஸ்.வி. அறிமுகமான நிகழ்விலிருந்து தொடங்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக எம்.எஸ்.வியுடன் சேர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரையும் சந்தித்தது, எம்.எஸ்.வியின் ஐம்பதாண்டு இசைப் பயண பாராட்டு விழாவில் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி கலந்து கொண்டு எம்.எஸ்.வி. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்த சிறப்பைப் பாராட்டியது, "உலகம் சுற்றும் வாலிபன்' படத்தின் இசைப் பணிகள் முடிந்தபின் எம்.ஜி.ஆர். ஒரு பெருந்தொகையை தனியே எம்.எஸ்.வி.க்கு தந்தது, மும்பையில் விசுவநாதன் - ராமமூர்த்தி இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, "ஓடம் நதியினிலே' பாடலைப் பாட வேண்டும் என்று ஹிந்தி இசையமைப்பாளர் நெளஷத் ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தந்தது, எம்.எஸ்.வி. - டி.கே.ஆர். இசையமைத்த "மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாடல் தன் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று இளையராஜா கூறியது - இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் மிகவும் சுவையாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
 " முகமது பின் துக்ளக்' படத்தில் வரும் "அல்லா அல்லா' பாடலை எம்.எஸ்.வி.பாட வேண்டும் என்று அப்பட இயக்குநர் சோ கூற, எம்.எஸ்.வி. தயங்க, சோ மூன்று பேரின் பெயரை மூன்று சீட்டுகளில் தனித்தனியே எழுதிப் போட்டு, அதில் ஒரு சீட்டை எடுத்துப் பார்க்க எம்.எஸ்.வி. பெயர் அதில் இருந்தது. அதன்படி, எம்.எஸ்.வி. அப்பாடலை பாடி முடித்த பின் சோ கூறியது: "நான் மூன்று சீட்டிலும் எம்.எஸ்.வி. பெயரைத்தான் எழுதியிருந்தேன்'.
 எம்.எஸ்.வி.யின் இசைத்திறமை குறித்து மட்டுமல்லாமல், மற்ற கலைஞர்கள் அவர் மீது வைத்திருந்த மதிப்பும், அவர் பிற கலைஞர்கள் மீது வைத்திருந்த அன்பும் இந்நூலிலுள்ள ஒவ்வொரு நிகழ்விலும் தெளிவாகத் தெரிகின்றன.
 புகழின் உச்சிக்குச் சென்றபோதும், உள்ளத்தில் குழந்தையாகவே இருந்த எம்.எஸ்.வி குறித்த பல சுவையான செய்திகளின் தொகுப்பே இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com