சேக்கிழார் செந்தமிழ்

சேக்கிழார் செந்தமிழ் (மூன்று பாகங்கள்) - எ.வேலாயுதன்; பாகம் 1; பக்.279; ரூ.180; பாகம் 2; பக்.304; ரூ.230; பாகம் 3; பக்.224; ரூ.220; முருகம்மை இல்லம், 135, புதுப்பேட்டை, பனப்பாக்கம் அஞ்சல், ராணிப்பேட்ட
சேக்கிழார் செந்தமிழ்

சேக்கிழார் செந்தமிழ் (மூன்று பாகங்கள்) - எ.வேலாயுதன்; பாகம் 1; பக்.279; ரூ.180; பாகம் 2; பக்.304; ரூ.230; பாகம் 3; பக்.224; ரூ.220; முருகம்மை இல்லம், 135, புதுப்பேட்டை, பனப்பாக்கம் அஞ்சல், ராணிப்பேட்டை மாவட்டம் -631052.
 சைவ சமயத்தில் இறைவனைப் போற்றிப் புகழும் நூல்கள் இருப்பது போன்றே இறைத்தொண்டர் பெருமையை உரைக்கும் நூல்களும் உள. அவற்றுள் முக்கியமானவை மூன்று. அவை நம்பியாரூரரின் "திருத்தொண்டத் தொகை', நம்பியாண்டார் நம்பிகளின் " திருத்தொண்டர் திருவந்தாதி', சேக்கிழாரின் "திருத்தொண்டர் புராணம்'.
 இவற்றுள் திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணம் முழுவதையும் உரைநடை வடிவில் மூன்று பாகங்களாக எழுதியுள்ளார் நூலாசிரியர்.
 முதல் பாகத்தில் திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம் ஆகிய நான்கு சருக்கங்களுக்கான உரைநடை விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
 இரண்டாம் பாகத்தில் திருநின்ற சருக்கம், வம்பறா வரிவண்டு சருக்கம் ஆகியவற்றுக்கும், மூன்றாம் பாகத்தில் வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், இறைக்கண்டான் சருக்கம், கடல் சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர் சருக்கம், வெள்ளானை சருக்கம் ஆகியவற்றுக்கும் விளக்கவுரை வழங்கப்பட்டுள்ளன.
 நூலின் இறுதியில் இந்நூலாசிரியர் சேக்கிழாரைப் போற்றி "சேக்கிழார் திருவெண்பா மாலை' என்ற பெயரில் நூறு வெண்பா பாடல்களை இணைத்துள்ளார்.
 சைவத்துக்குப் பெரும் தொண்டாற்றிய நாயன்மார்கள் வரலாற்றை எளிமையாக அறிந்து கொள்ள இந்நூல் உதவும். திருத்தொண்டர் புராண வரிகளையே ஆங்காங்கு மேற்கோள்களாகக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com