யானைகளும், அரசர்களும் - சுற்றுச்சூழல் வரலாறு

யானைகளும், அரசர்களும் - சுற்றுச்சூழல் வரலாறு

யானைகளும், அரசர்களும் - சுற்றுச்சூழல் வரலாறு - தாமஸ் ஆர்.டிரவுட்மன் (தமிழில் - ப.ஜெகநாதன், சு.தியோடர் பாஸ்கரன்);  பக். 230; ரூ.290; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்; 04652 - 278525.

கானுயிர்கள் குறித்து வெளிவந்துள்ள ஆய்வு நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆவணப் பதிவாக வெளியாகியுள்ளது தாமஸ் ஆர்.டிரவுட்மனின் இந்நூல்.

இந்தியாவில் உள்ள யானைகளின் உருவ அமைப்பு, குணாதிசயங்கள், பண்புகளை நூலில் விவரித்துள்ளார் அதன் ஆசிரியர்.  யானைகள் போருக்கு எவ்வாறு பயன்படுத்தப்பட்டன,  பயிற்சிகள், காடுகளின் பாதுகாப்பு  உள்ளிட்ட விவரங்கள் விரிவாக சான்றுரைக்கப்பட்டுள்ளன.

ஆசிய யானைகளின் அழிவுக் காலம் இந்தியாவில் காலனி ஆதிக்கம் காலூன்றத் தொடங்கியதில் இருந்துதான் எனக் கூறும் தாமஸ் ஆர்.டிரவுட்மன், தந்தங்கள், தும்பிக்கைகள், பொழுது
போக்கு ஆகியவற்றுக்காக ஓர் ஆகப்பெரிய உயிரினம் அழிக்கப்பட்ட கதையையும் எடுத்துரைக்கிறார்.  யானைகளுக்கு மதம் பிடித்தால்தான் அவை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது என அர்த்தம் உள்பட பல அறியப்படாத தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

சீனாவில் யானைகளை போருக்குப் பயன்படுத்தவில்லை; காடுகள் அழிப்பால் அந்த உயிரும் அழிந்தொழிந்ததைப் பற்றியும் நூலில் பேசப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து யானைகள் மேற்கு,  கிழக்கு நாடுகளுக்கு எவ்வாறு புலம்பெயர்ந்தன என்ற வரலாறும் உள்ளது. வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் வனத்தை தொலைத்துவிட்டு திக்கின்றி நிற்கும் அந்த பிரமாண்ட உயிரினத்தின் ஈராயிரம் ஆண்டு கால பயணத் தடம் இந்நூல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com