பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி - கு.அன்பழகன்; பக்.368; ரூ.370; காவ்யா, சென்னை - 24; )044-2372 6882.
பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி

பூலித்தேவனின் தளபதி வெண்ணிக் காலாடி - கு.அன்பழகன்; பக்.368; ரூ.370; காவ்யா, சென்னை - 24; )044-2372 6882.
 அடிமை இந்தியாவில், ஒற்றுமையின்றி பல்வேறு பாளையங்களாகச் சிதறிக்கிடந்த நெல்லைச் சீமையில், பூலித்தேவன் அரசாண்ட நெல்கட்டும் செவ்வல் மட்டுமே கப்பம் கட்டாமல் ஆங்கிலேயரை துணிவுடன் எதிர்த்தன. பூலித்தேவனின் படைக்குத் தலைமைத் தளபதியாக விளங்கியதோடு மட்டுமல்லாது, அவருக்கு வலது கரமாகவும் விளங்கிய வெண்ணிக் காலாடியின் வீர தீரத்தையும் அவர்தம் அர்ப்பணிப்பு, நாட்டுப்பற்றையும் இந்நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.
 சாதிய உணர்வுகள் தலைதூக்காமல், தாய்நாட்டின் விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு, பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வீரர்கள் வெண்ணிக் காலாடியின் தலைமையின் கீழ் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆங்கிலேயரை வெற்றி கண்டனர்.
 பூலித்தேவன் படையிலிருந்த சுமார் ஐம்பதாயிரம் வீரர்களை வெண்ணிக் காலாடி அன்போடு வழிநடத்தினார். பகடை சமுதாயத்தை சேர்ந்த துணைத் தலைமை தளபதி ஒண்டி வீரனுடன் சேர்ந்து வீரர்களுக்குப் போர்ப்பயிற்சியும் அளித்தார். தாய் மண்ணின் மீதும், மன்னன் பூலித்தேவன் மீதும் மாறாப் பற்றும் விசுவாசமும்
 கொண்டிருந்தார்.
 பூலித்தேவனுக்கு அரணாக வெண்ணிக் காலாடி இருக்கும் வரை அவரது பாளையத்தை வீழ்த்த முடியாது என்று அறிந்த கான்சாகிப் என்னும் மருதநாயகம் போர்க்களத்துக்கு வெளியே நயவஞ்சகமாக காலாடியைக் கொன்று பழி தீர்க்கிறான். தனது மரணத் தறுவாயிலும் காலாடி போரிட்டு பூலித்தேவன் மார்பில் வீர மரணம் அடைகிறார்.
 ஏற்றத்தாழ்வின்றி பல்வேறு சமுதாயத்தினரை சரிசமமாக பாவித்து பூலித் தேவனும், வெண்ணிக் காலாடியும் சமத்துவம் பேணியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com