தமிழக முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்

தமிழக முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்

தமிழக முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும் - முனைவர் அ. பசீர் அகமது; பக்.584; ரூ. 450; வளர்பிறை பதிப்பகம், மதுரை- 625 007; ✆98940 64783.

முஸ்லிம் அல்லாதவர்களும் அறியத் தக்க மொழிநடையில் அண்மையில் வெளிவந்த சிறந்த நூல். 

அறிமுகம் தொடங்கி, கொட்டியும்  'ஆம்பலும் நெய்தலும் போலவே' என்ற தலைப்பில் தமிழ்ச் சமுதாயத்தில் முஸ்லிம்கள் எவ்வாறு கலந்திருக்கிறார்கள் என்பதுடன் 20  அத்தியாயங்களில் வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மதம் சார்ந்ததாக மட்டுமல்லாமல், சமூகம், கல்வி, பொருளாதாரம் பற்றியும் விரிவாகப் பேசும் இந்த நூல், அரசுகளிலும் அரசியலிலும் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றியும் விவரிக்கிறது. 

தமிழகத்துக்கும் அரபுக்குமான தொடர்புடன் இதன்வழி இஸ்லாமின் பரவல் பற்றியும் நூலில் விவரிக்கப்படுகிறது.

இறைநேசர்கள் பற்றி கூறுகையில், கம்பம்  வாவேர் சூஃபி, திருச்சி நத்ஹர் வலி பாபா, நாகூர் ஷாகுல் ஹமீது ஆண்டகை எனப் பலரும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அரசியல் ஆளுமைகள் பற்றியும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

மன்னர்கள்,  ஐரோப்பியர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில்  முஸ்லிம்கள் வாழ்க்கை - பங்களிப்பு பற்றி விளக்கும் நூலில் உருது முஸ்லிம்களின் குடியேற்றம் பற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் போராட்டத்திலும்  விடுதலை இந்தியாவிலும் முஸ்லிம்களின் பங்களிப்பைத் தெரிவிப்பதுடன், மதத்தைத் தாண்டிய நாட்டுப் பற்றும் சிறந்த சான்றுகளுடன் உறுதி செய்யப்படுகிறது. 'ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி' என்ற கட்டுரையின் தெளிவும் நோக்கமும் சிறப்பு.  எண்ணற்ற நூல்களை ஆராய்ந்து ஏராளமான தகவல்களைத் தக்க சான்றுகளுடன் இந்த நூலில் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர். வரலாற்றில் ஆர்வமுள்ளோர் படிக்க வேண்டிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com