பாதை அமைத்தவர்கள் முதல் பெண்கள் 2

பாதை அமைத்தவர்கள் முதல் பெண்கள் 2

பாதை அமைத்தவர்கள் முதல் பெண்கள் 2 - நிவேதா லூயில்;  பக். 304; ரூ.300; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-4; ✆75500 98666.

வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட தளங்களில் 7 ஆண்டுகளாக நூலாசிரியர் இயங்குபவர்.    தனது   முதல் நூலில் 45 பெண்களை அறிமுகம் செய்தவர், இந்த நூலில் 30 பெண்களை அறிமுகம் செய்துள்ளார். 

பானுமதி ராமகிருஷ்ணா, ஹில்டா மேரி லாசரஸ், இக்பாலுன்னிசா ஹூசைன் பேகம், கிருபாபாய் சத்தியநாதன், சுவர்ணமுகி, ரோஷனாரா பேகம், அபுஷா பீபி மரைக்காயர், காலிஷா பீ மெஹபூபு, கே. ஜே.சரஸô, ஆனி ஜகந்நாதன், ஆலிஸ் சவாரெஸ், பாலசரசுவதி, சரஸ்வதி வேணுகோபால், சந்திரா ராஜரத்தினம், கமலா கிருஷ்ணமூர்த்தி, சாரதா மேனன், சி.என்.சௌமினி, அகிலமணி ஸ்ரீனிவாசன், விஜயலட்சுமி மேனன், பத்மா பந்தோபாத்யாய், தபிதா பாபு, ராசம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ், அன்னம்மாள் சத்தியநாதன், ரோஸ் கோவிந்தராஜூலு, ஏ.எஸ்.பொன்னம்மாள், திருக்கோகர்ணம் சிவராமன் ரங்கநாயகி, திலகவதி, சரஸ்வதி ராஜாமணி, ஞானம் கிருஷ்ணன், இவாம் பில்ஜென் ஆகிய 30 பெண்களின் சாதனைகளுக்குப் பின்னால் உள்ள சோதனைகளை நூலில் ஆசிரியர் விவரித்துள்ளார். 

தமிழ்நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ்.  திலகவதியுடனான நேர்காணலில் அவர் குறித்த பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது.   7 முறை எம்எல்ஏவாக இருந்த ஏ.எஸ்.பொன்னம்மாளுக்கு  கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோருடன் இருந்த நல்லுறவை அறிய முடிகிறது.  இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் மரணம் பொன்னம்மாளை பாதித்தது முதல் அன்றாட நிகழ்வுகளை அவர் டைரியில் குறிப்புகளாக எழுதியுள்ளதை அறிய முடிகிறது. பெண்கள் வாசித்து, தங்களை முன்னேற்றம் அடைய செய்ய வழிவகுக்கும் நூல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com