வள்ளலார் வளர்த்த தமிழ்

வள்ளலார் வளர்த்த தமிழ்

வள்ளலார் வளர்த்த தமிழ் - தாமல் கோ. சரவணன்; பக்.144; ரூ.199; வானவில் புத்தகாலயம், சென்னை-17; ✆ 72000 50073.

பகுத்தறிவுச் சிந்தனையின் முன்னோடி என்றும் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்றும் இரு தரப்பினரும் கொண்டாடினாலும் தனிநெறி கண்ட ஆன்மிக புரட்சியாளர் அருட்பிரகாச வள்ளலார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளைச் சிறப்பித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.

சாதி, சமயம், மதம், பாலின வேற்றுமைகளைக் கடந்து வள்ளலார் தமிழையும், தமிழினத்தையும் துறந்தாரில்லை. அவருடைய ஜீவகாருண்யம், சன்மார்க்கம், அறிவியல் சிந்தனை, மருத்துவக் குறிப்பு, மெய்யியல் போன்றவை குறித்து பல்வேறு நூல்கள், ஆய்வுகள் வெளியான போதிலும், அவருடைய தமிழறிவுச் செறிவும், தமிழ்ப் பணியும் தமிழர்களுக்கு எடுத்தியம்பும் வகையிலான இந்த நூல் தனித்துவம் பெறுகிறது.

உரைநடையின் முன்னோடி, கல்வெட்டு ஆராய்ச்சிக்கு வித்திட்டவர், எழுத்துச் சீர்திருத்தத்தின் படிக்கல், எளிய தமிழில் பாடல்களை அளித்தவர், பதிப்பாசிரியர், உரையாசிரியர்.. என்று வள்ளலாரின் பன்முகத்தன்மையை இந்த நூல் சிறப்பித்துக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் பிறப்பித்தமைக்கு நன்றி, தமிழனாய் பிறப்பித்தமைக்கு நன்றி, வள்ளலாரின் சொற்பொழிவுகள், தனிப்பாடல்களின் தனித்துவம், திருவருட்பாவின் சிறப்பியல்புகள் குறித்த விளக்கம் உள்ளிட்ட 16 தலைப்புகள் வள்ளலாரின் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்துகின்றன.

துணை நின்ற நூல்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளதால், மேலும் விவரம் அறிய விரும்புவோருக்கு நல்லதொரு வழிகாட்டுதல்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com